• Home
  • அரசியல்
  • இன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு, கருணாநிதி கைது

இன்று எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு, கருணாநிதி கைது

Image

ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் மறந்துட்டாங்களே

அரசியலில் ஒரு சில தினங்களுக்கு தனித்துவம் உண்டு. அப்படி ஒரு தினம் ஜூன் 30. அ.தி.மு.க.வினருக்கும் தி.மு.க.வினருக்கும் இது மறக்க முடியாத நாள். ஆனால், ரெண்டு பேருமே மறந்துவிட்டார்கள் என்பது தான் விசித்திரம்.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற பிறகு அ.தி.மு.க. எனும் புதிய கட்சி தொடங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரியணை ஏறிய தினம் இன்று. 30.06.1977-ல் முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்று மரணம் வரையிலும் ஆட்சி செய்தவர். இந்த தினத்தை அ.தி.மு.க.வினரும் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

அதேபோல், இன்று தி.மு.க.வினருக்கு இன்னொரு வகையில் கருப்பு தினம். அதாவது 2001 ஜூன் 30ம் தேதி கலைஞர் கருணாநிதியை நள்ளிரவு நேரத்தில் கைது செய்யப்பட்ட தினம். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்து நின்றதும் சிறை வாசலில் கருணாநிதியும் கனிமொழியும் காத்துக்கிடந்ததும் மறக்க முடியாத வரலாறு.

ஆனால், இதனை இரண்டு திராவிடக் கட்சிகளும் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் விசித்திர அரசியல்.

Leave a Comment