• Home
  • அரசியல்
  • எம்.ஜி.ஆர். ரசிகர் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்தினார்..?

எம்.ஜி.ஆர். ரசிகர் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்தினார்..?

Image

விஜய் தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்

தன்னை ஒரு குட்டி எம்.ஜி.ஆராக நினைத்துக்கொண்டு இருக்கிறார் நடிகர் விஜய். ரசிகர்களையும், கூட்டத்தையும் கட்டுப்படுத்தும் கலை எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அதனாலே அவர் இன்றும் கொண்டாடப்படுகிறார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆர். பேசி முடித்ததும் வெளியே செல்வதில் மிகப்பெரும் நெரிசல் உருவாகும் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து எம்.ஜி.ஆர். பேசி முடிக்கும்போது ஒரு தகவல் சொன்னார். ‘’நான் பேச வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் பேசிவிட்டேன். ஆனால், அடுத்து ஆண்களுக்கு மட்டும் சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறது. அதனால், இந்த கூட்டத்துக்கு வந்திருக்கும் பெண்கள், குழந்தைகள் எல்லோரும் இப்போதே வெளியே சென்றுவிடுங்கள்…’’ என்று நேரம் கொடுத்தார்.

பெண்கள் எல்லோரும் வெளியே சென்ற பிறகு, ‘’உங்களுக்கு நான் புதிதாக எதுவும் சொல்லப்போவதில்லை. பெண்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பதற்காகவே அவர்களை முதலில் அனுப்பினேன்..’’ என்று கூறினார்.

இதுதான் நிஜமான தலைமைப் பண்பு.

Leave a Comment