இந்தியப் பிரதமர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 380

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் சி ஜின்பின் ஆகியோர் முன்னிலையில் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் வரலாற்று முக்கியத்துவம் வாயந்த வாய்ப்பு கிடைத்ததற்கு, ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு.

மாநகரங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது சீன நாட்டில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் தரக்கூடிய ஒரு முக்கியத்துவ நிகழ்ச்சி. எனவே, இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்குத் தகுதியான மேயரை தேர்வு செய்வதற்கு உளவுத்துறை மூலம் தீவிரமான ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அத்தனை மேயர்கள் பற்றிய தரவுகளும் சேகரிக்கப்பட்டன. அந்த குறிப்புகளில் இருந்து பொருத்தமான நபரை தேர்வு செய்வதற்கு பல்வேறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. அத்தனை தகுதிகளும் ஒருங்கே அமையப்பெற்றவராக மேயர் சைதை துரைசாமி மட்டுமே இருந்தார்.

அதோடு, இந்தியாவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேயர். எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத அரசியவ்வாதி. உழைத்து சம்பாதித்த பணத்தில் அறக்கட்டளை உருவாக்கி மாணவர்களுக்கு சேவை செய்துவருபவர் என்பன போன்ற தகுதிகள் வேறு எந்த மேயருக்கும் இல்லை என்பதாலே மேயர் சைதை துரைசாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் அடிப்படையிலே சென்னை மாநகராட்சிக்கும் சீனாவில் உள்ள சொங்சிங் மாநகருக்கும் இடையில் சகோதரத்துவ நகர ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் சி ஜின்பின் கலந்துகொள்ளும், இந்திய – சீனா கூட்டு வளர்ச்சிக்கான பங்களிப்பு மாநாட்டில்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீளமான மேஜையின் இரண்டு ஓரங்களின் எதிரெதிரே சென்னை மாநகராட்சி மேயரான சைதை துரைசாமியும், சீன நாட்டு சொய்கிங் நகர மேயரும் அமர்ந்திருக்க, உலகின் மிகவும் வலிமையான இரண்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மேயர் சைதை துரைசாமி கையெழுத்துப் போட்டார். இந்த நிகழ்வினை, எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த தருணம் என்றும் தன் வாழ்நாள் பாக்கியம் என்றும் கருதுகிறார் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment