என்ன செய்தார் சைதை துரைசாமி – 399
மேயரை சந்தித்து புகார் மனு கொடுப்பதற்கு என்று வாரத்தில் ஒரு நாள் மாநகராட்சியில் ஒதுக்கப்படுவது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால், மேயர் சைதை துரைசாமி பெருநகர சென்னை மேயர் பதவிக்கு வந்த பிறகு புகார் மனு பெறுவதில் மிகப்பெரிய மாற்றமும் எழுச்சியும் உருவானது.
மக்கள் விரும்புகிற நேரத்தில் எல்லாம் மேயர் சைதை துரைசாமியை சந்தித்து புகார் மனு கொடுக்க முடியும் என்பது சாத்தியமானது. காலை நேரத்தில் மேயர் வீட்டில் சந்தித்துக் கொடுத்தார்கள். மாநகராட்சி அலுவல் நேரத்தில் சந்தித்து மனு கொடுத்தார்கள். இரவு நேரத்திலும் வீட்டில் நேரடியாக சந்தித்து புகார் கொடுத்தார்கள்.
இதனால் மேயர் சைதை துரைசாமியின் காலத்தில் புகார் மனுக்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. மேயரிடம் மனு கொடுத்தால், அது நிறைவேற்றப்படும் அல்லது நிறைவேற்ற முடியாததுக்குக் காரணம் தெரிவிக்கப்படும் என்பதால் அனைத்து மக்களும் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முன்வந்தார்கள்.
மேயர் சைதை துரைசாமி காலத்தில் 5,69,629 புகார் மற்றும் கோரிக்கைகள் பெறப்பட்டன. இந்த மனுக்களை எல்லாம் மேல் நடவடிக்கைக்காக மேயர் சைதை துரைசாமி பரிந்துரை செய்தார். மாநகராட்சி வரலாற்றில் இத்தனை புகார் மனுக்களை பெற்று, பரிந்துரை செய்ததிலும் சாதனை புரிந்தது சைதை துரைசாமி மட்டும் தான், இந்திய அளவில் முதல் மேயராகத் திகழ்கிறார். முந்தைய 5 வருட காலத்தில் மொத்தமே 5,665 புகார் மனுக்கள் மட்டுமே பெறப்பட்டதாக மாநகராட்சி குறிப்புகள் உள்ளன.
அதற்கும் முந்தைய காலத்தில் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன என்பதற்கு எந்தக் குறிப்புகளும் இல்லவே இல்லை. மனுக்கள் பெறப்பட்ட விபரங்கள் குறித்த மாநகராட்சியின் பதிவேடுகளை ஆய்வு செய்துபார்த்தால், மேயர் சைதை துரைசாமி எந்த அளவுக்கு சாதனைகள் புரிந்திருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
- நாளை பார்க்கலாம்.












