காலை உணவு தவிர்ப்பவர்களுக்கு உற்சாகம் தரும் ’டோபமைன்’ மற்றும் செரடோனின் ஹார்மோன்களின் அளவு குறைகிறது. எனவே, காலை உணவை மறக்காதீங்க.
காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
லிச்சி பழத்தில் நார்சத்து அதிகம் இருப்பதுடன் மலச்சிக்கல் நீக்கி உடலின் நச்சுக்கள் வெளியேற உதவுகிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம்.
வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து தலையில் பூசினால் தலைவலி குணமாகும்.
இரவு வெந்தயத்தை ஊற வைத்து, மறுநாள் காலை நீரை மட்டும் வடிகட்டி, வெறும் வயிற்றில் குடித்துவந்தால் ரத்தக் குழாய்கள் சுத்திகரிக்கப்பட்டு இதய நோய்கள் தடுக்கப்படும்.
பிரண்டையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. எனவே, எலும்புகள் பலமாவதற்கு வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் நாவல்பழம், நெல்லிக்காய் நன்றாக சாப்பிடலாம். மலை வாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம். கொய்யா, பப்பாளி, ஆப்பிள் தினமும் 50 கிராம் அளவு சாப்பிடலாம்..