தொழில்நுட்பத்தில் உறுதி காட்டிய மேயர்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 222

தொழில்நுட்ப வளர்ச்சிகளை மக்கள் நன்மைக்குப் பயன்படுத்திய முதல் மேயர் சைதை துரைசாமி தான். சிசிடிவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தவர் மேயர் சைதை துரைசாமி தான். அதேபோல், செல்போன் மற்றும் இணையம் போன்றவற்றை ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டார்.

செல்போன் இல்லாத நபரே இல்லை. அதோடு புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு பிரத்யேக நிபுணர்கள் தேவையில்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஆகவே இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கபூர்வமான வழியில் சாலைப் பணிகளில் பயன்படுத்த விரும்பினார். அதன்படி, சாலைப் பணிகள் ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் அவர்கள் கண்காணிப்பை வீடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவு செய்து மாநகராட்சி தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி உத்தரவு போட்டார். இந்த உத்தரவுக்கு வரவேற்பு கிடைத்த அதேநேரம் சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

‘ஏற்கெனவே பணியாளர்கள் பற்றாக்குறையால் அதிக நேரம் உழைக்கிறோம், அதோடு இதையும் செய்வது கடுமையான பணிச்சுமை ஏற்படும், தொழில்நுட்ப குறை உருவாகும், எல்லோராலும் சரியாக புகைப்படம் எடுக்க முடியாது’ என்றெல்லாம் சொல்லி இந்த நடைமுறையைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் முயற்சி செய்தார்கள்.

ஆனால், மேயர் சைதை துரைசாமி இதனை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் உறுதியாக இருந்தார். ‘’அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்வது மட்டும் போதாது, அதனை ஆதாரபூர்வமாக பதிவு செய்ய வேண்டியதும் அவசியம். இதனால் மக்களுக்கு அதிக நம்பிக்கை உண்டாகும். மேலும், ஒப்பந்ததாரர்கள் தங்கள் பணியை அக்கறையுடன் செய்வார்கள்.

எதிர்காலத்தில் சாலைப் பணிகள் குறித்து ஏதேனும் குற்றச்சாட்டு எழுப்பப்படும் நேரத்தில் இதனை காட்டுவதற்கும் முடியும். ஆய்வுகளைப் பதிவு செய்வதற்கு அதிக நேரம் ஆகாது. வீடியோ எடுக்கத் தெரியாது, புகைப்படம் எடுக்கத் தெரியாது என்பவர்களுக்கு தொழில்நுட்பம் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்…’’ என்று உறுதியாகத் தெரிவித்தார். இதற்கு மேல் யாராலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலவில்லை.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment