உலக அதிசயம் சீனப் பெருஞ்சுவரில் மேயர்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 382

அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட மேயர் சைதை துரைசாமி, நட்புநகர ஒப்பந்தத்தில் உலகின் இரண்டு முக்கியத் தலைவர்கள் முன் அமர்ந்து கையெழுத்துப் போட்டார். இது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்திய அளவில் கிடைத்திருக்கும் மிகப்பெரும் கெளரவம். எனவே, இந்த நிகழ்வு தன்னுடைய அரசியல் வாழ்வில் மறக்கமுடியாத முக்கிய நிகழ்வு என்று கருதுகிறார்.

இதையடுத்து சீன அதிபர் கொடுத்த விருந்தில் கலந்துகொண்டு கலைநிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தார். எந்த ஒரு கலையிலும் நேர்த்தியைக் காட்டுவதில் சீனர்கள் வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் அளவுக்கு அவை மேயர் சைதை துரைசாமியை கட்டிப்போட்டன.

இதையடுத்து சீனாவுக்குச் செல்லும் ஒவ்வொரு நபரும் பார்வையிட விரும்பும் சீனப்பெருஞ்சுவரை பார்வையிட்டார் மேயர் சைதை துரைசாமி. காலத்தை வென்று நிற்கும் சீனப்பெருஞ்சுவர் என்பது ஒரு கட்டடக்கலைச் சாதனையைத் தாண்டி, வரலாற்றின் ஓர் ஆழமான சின்னமாகவும், மனித உழைப்பின் அடையாளமாகவும் விளங்குகிறது.

மங்கோலியர்களின் படையெடுப்பைத் தடுப்பதற்காக சுமார் 21 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கட்டப்பட்டுள்ளதால் இது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கி.மு. 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க பெருஞ்சுவரைக் கட்டுவதற்கு சுமார் 20 லட்சம் மக்கள் பங்கேற்றதாக வரலாறு தெரிவிக்கிறது. இப்படியொரு வரலாற்றுச் சின்னத்தை பார்வையிட்டு ஆச்சர்யப்பட்டார் மேயர் சைதை துரைசாமி.

இதையடுத்து, வித்தியாசமான ஒரு பயணம் மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி. ஆம், எல்லோரும் ஆடம்பரமும் செல்வச்செழிப்பும் நிறைந்த சீன நகரங்களைப் பார்வையிடுவதற்கு ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், மேயர் சைதை துரைசாமியோ சீனாவின் கிராம அமைப்பு எப்படியிருக்கிறது, அங்கு மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நேரில் கண்டு வியந்தார்.

இதையடுத்து சீனாவிலும் ஆச்சர்யமான ஒரு காரியம் செய்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment