பேச்சுவார்த்தையில் சாதித்த மேயர்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 202

ரேஸ் கோர்ஸ் சாலை நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் என்றால், ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் ஒரு பகுதியைக் கேட்டு வாங்குவது மட்டுமே தீர்வு என்று தெரியவந்ததும் என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்தார் மேயர் சைதை துரைசாமி.

ஏனென்றால் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியுடன் மேயர் சைதை துரைசாமிக்கு நல்ல உறவும் நீண்ட காலப் பழக்கமும் உண்டு என்றாலும், அந்த பழக்கத்தை வைத்துக்கொண்டு மாநகராட்சிக்கு நிலம் கேட்பது சரியாக இருக்குமா என்று யோசனை செய்தார் சைதை துரைசாமி. மக்கள் சந்திக்கும் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, அந்த முயற்சியை செய்து தான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

உடனே, ரேஸ்கோர்ஸ் சாலையில் நிலவும் நெருக்கடி குறித்த அனைத்து தகவல்களுடன் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியை நேரில் சந்தித்துப் பேசினார் மேயர் சைதை துரைசாமி. மக்களின் சிரமத்தையும், சாலை விரிவாக்கத்திற்கு உள்ள ஒரே ஒரு வாய்ப்பையும் தெரிவித்தார். ஆலந்தூர், ஆதம்பாக்கம், நேரு நகர் போன்ற இடங்களுக்கு மக்கள் நெரிசல் இன்றி செல்வதற்கு வசதியாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின்  முன்புறம் உள்ள காலி  இடத்தைக் கொடுக்க வேண்டும் என்று சைதை துரைசாமி கோரிக்கை வைத்தார்.  

சைதை துரைசாமி மீது ராமசாமிக்கு நிறையவே அன்பு உண்டு, மேலும் அவர் மக்கள் நலனுக்காகவே கேட்கிறார் என்றதும் எந்த கேள்வியும் கேட்காமல், சாலை விரிவாக்கத்திற்குத் தேவையான இடத்தைத் தருவதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்தார். அதோடு, அந்த இடத்தில் மேயர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் ஒதுக்கி, பயணிகள் உட்கார்ந்து செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் ஒன்றும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது.

எந்த ஒரு பிரச்னை என்றாலும் அதற்கு ஒரு தீர்வு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை சைதை துரைசாமிக்கு உண்டு. அதனால் தான் எந்த தயக்கமும் இல்லாமல் எடுத்த காரியத்தை முடித்தார். வேறு ஒரு மேயரால் இதை செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment