மம்முட்டி எனும் தத்துவ ஞானி

Image
  • காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது

நடிகர் மம்முட்டியை ஒரு நல்ல திரைக்கலைஞனாக, மனிதனாக பலரும் அறிவார்கள். வெற்றிக்குத் துள்ளுவதும் தோல்விக்குத் துவள்வதும் அவரிடம் கிடையாது.

பெரிய வெற்றியைப் பார்த்ததும், ‘அரசியலுக்கு வரப்போகிறேன்’, ‘மக்களுக்கு நன்மை செய்யப் போகிறேன்’, ‘மாற்றத்தை உருவாக்கப் போகிறேன்’ என்றெல்லாம் பேசுபவர் இல்லை. அதோடு அவரது திரைப்படம் பற்றியும் அவர் அதிகம் பேசுவதில்லை.

சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் கொடுத்திருக்கும் பதிலும், அவர் எப்பேர்ப்பட்ட தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்பதை உணர்த்தியிருக்கிறது.

‘’மம்முட்டி என்பவரை இந்த உலகம் எப்படி நினைவு கூரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்..?’’

“எத்தனை நாட்கள் மக்கள் என்னை நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வருடம், பத்து வருடம், 15 வருடம் அவ்வளவு தான். உலகம் அழியும் வரை மக்கள் உங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. யாருக்கும் அப்படி நடக்கப்போவதில்லை.

மிகச் சிறந்த நபர்கள் கூட மிகச் சொற்பமாகவே நினைவு கூரப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன். அப்படியிருக்கும்போது எப்படி என்னை காலம் கடந்து நினைவுகூர்வார்கள்; அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நீங்கள் மறைந்துவிட்ட பிறகு மக்களுக்கு உங்களை எப்படி தெரியும்? உலகம் அழியும் வரை தங்களை நினைத்து கொண்டேயிருப்பார்கள் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் உது உண்மையில்லை” என்கிறார்.

ஆயிரத்தில் ஒருவன் அல்ல, கோடியில் ஒருவன் இவர்.