என்ன செய்தார் சைதை துரைசாமி – 502
பள்ளி மாணவர்கள் வயிற்றுப் பசியுடன் இருக்கக் கூடாது என்று பெருந்தலைவர் காமராஜரும், எல்லோருடைய பசியும் தீரவேண்டும் என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் அவரவர் பாணியில் மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
காமராஜரும், எம்.ஜி.ஆரும் முதல்வராக வந்து அரசு இயந்திரத்தின் உதவியுடன் இந்த சாதனையை செய்ய முடிந்தது. சைதை துரைசாமி ஒரு தனி மனிதர். எனவே, வயிற்றுப் பசியில் வாடும் ஏழைகளுக்குத் தன்னால் முடிந்த அளவு சிறிய உதவி செய்வதற்கு முடிவு செய்தார்.
உடல் உழைப்புத் தொழிலாளர்கள், ஏழைகள், முதியவர்களுக்கு பயன் தரும் வகையில், 2006-ம் ஆண்டு சைதாப்பேட்டை பூக்காரத் தெருவில் மலிவு விலை உணவகம் ஒன்றை, அவரது மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம் தொடங்கினார். மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை என்பது முழுக்க முழுக்க சைதை துரைசாமியின் சொந்தப் பணத்தில் நடத்தப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு வேறு எவரிடம் இருந்தும் சைதை துரைசாமி நன்கொடை பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, சைதாப்பேட்டையில் ஒரு இடத்தில் மட்டும் ஏழைகள் வாங்கி சாப்பிடும் வகையில் மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. அந்த உணவகத்தில் சைதை துரைசாமி நிர்ணயித்த விலை என்ன தெரியுமா..?
- நாளை பார்க்கலாம்.
