கையைப் பற்றிக் கொள்ளுங்கள்

Image

அருகில் இருங்கள்.

பற்றிக் கொள்ளுங்கள்.

எதையாவது பேசுங்கள்.

இல்லை எனில்

புலம்புவதையாவது

கேட்டுக் கொண்டிருங்கள்.

உங்களால் முடிந்த வரை

எல்லோருக்கும்

ஏதோ ஒன்றாக

இருந்து கொண்டே இருங்கள்.

இவ்வளவு

மனிதர்கள் இருக்கும் உலகில்

யாரும் சாவைப் பற்றி

யோசிக்கவே கூடாது.

  • அரூஸா ஜெவாஹிர்

Leave a Comment