• Home
  • அரசியல்
  • மக்களவை பதவியேற்பில் நீட் ரத்து, வெல்க தமிழ்

மக்களவை பதவியேற்பில் நீட் ரத்து, வெல்க தமிழ்

Image

ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் அடிமை புராணம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்கள். வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு வெல்க சமூகநீதி என்றெல்லாம் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு நில்லாமல் பா.ஜ.க.வுக்கு எதிர் குரல் எழுப்பி அதகளம் செய்திருக்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்பு வாழ்க என கூறி கனிமொழி எம்.பி. தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக்கொண்டதுன் நில்லாமல், “தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்துக” என அவர் கூறியதும் பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாழ்க ஜனநாயகம், வாழ்க அரசியல் சாசனம்” எனக்கூறி திருமாவளவன் உறுதிமொழி எடுத்துக்கொள்ள, “தமிழ்க்கடவுள் முருகன் மீது ஆணையாக..” என உறுதிமொழி எடுத்துக்கொண்டார் மயிலாடுதுறை எம்.பி. சுதா.

இவர்களில் ஹைலைட்டாக தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதுன் நில்லாமல், வேண்டாம் NEET – Ban NEET” என முழக்கமிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

மக்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள த.சுமதி (என்ற) தமிழச்சி தங்கபாண்டியன், ‘’இந்திய அரசமைப்பில் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமார உறுதி கூறுகின்றேன். வாழ்க தமிழ் ! வளர்க முத்தமிழ் அறிஞரின் புகழ் ! வாழ்க தலைவர் தளபதி ! வாழ்க தமிழ்நாடு’’ என்றும் முழக்கமிட்டார்.

தமிழில் இவர்களை பதவி ஏற்கச்சொன்னதாலோ என்னவோ, எல்லோரும் சொல்லி வைத்தது போல் வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி என்று அடிமை புராணம் பாடியும் பதவி ஏற்றிருக்கிறார்கள்.

கடந்த முறை தமிழகத்தில் இருந்து மூன்று பெண் எம்.பி.க்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில் இப்போது கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி, சுதா, ராணி ஸ்ரீகுமார் என்று ஐந்து பேர் களம் இறங்கியிருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி கடந்த நாடாளுமன்றத்தைக் கலக்கிய பெண் எம்.பி.க்களும் கனிமொழியின் தோழிகளுமான வங்கத்தின் பெண் சிங்கம் மொய்த்ரா மகாராஷ்டிரா சிங்கம் சரத் பவாரின் அரசியல் வாரிசு சுப்ரியா அகிலேஷ் யாதவ் அவர்களின் மனைவி டிம்பிள் என மிகப்பெரிய படை களம் இறங்கியிருக்கிறது.

Leave a Comment