பெருசா சிரிங்க பாஸ்
டாக்டர் : வாயை நல்லாத் திறங்க
நோயாளி : ஆ!
டாக்டர் : இன்னும் பெரிசா..
நோயாளி : ஆ! ஆ!
டாக்டர் : இன்னும் அகலமா..
நோயாளி : நீங்க உள்ளே போய்த்தான் வைத்தியம் பாக்கமுடியும்னா எனக்கு அது வேணாம் டாக்டர்.
………………………..
விஜய் : என்னடா.. உன் பொண்டாட்டியைக் காணோம்னு சொல்லிட்டு பேப்பர்ல உன் அம்மாவைக் காணோம்னு விளம்பரம் கொடுத்திருக்கே?
அஜய் : என் அம்மாவைக் காணோம்னு சொன்னா தானா எம் பொண்டாட்டி வீட்டுக்கு வந்துடுவா!
………………………….
அம்மா: உனக்கு வெட்கமாயில்லை? உன் ஃப்ரண்ட் மேல இப்படிக் கல்லை வீசலாமா?
மகன்: முதல்ல அவன்தான் வீசினான். அப்புறமாத்தான் நான்….
அம்மா: நீ அப்படி செஞ்சுருக்கக்கூடாது. அவன் கல் எறிஞ்ச உடனே என் கிட்ட வந்து சொல்லியிருக்கனும்.
மகன்: உன்னால என்ன செய்ய முடியும்? நான் தான், உன்ன விட நல்லாக் குறிபார்த்து எறிவேன்.
………………………..
போலீஸ்: சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
கைதி: என்னை தலைகீழா தூக்குல போடணும்
………………………….
வங்கி மேலாளர்: நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
நபர்: இப்படி நீங்க செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!
…………………………
கீதா: அப்பா.. என்னைக் கல்யாணம் செய்துகொள்பவர் ரொம்ப புத்திசாலியா இருக்கணும்.
அப்பா: எனக்குத் தெரிஞ்சு புத்திசாலிகள் யாரும் தவறான முடிவு எடுக்க மாட்டாங்க
………………………….
டீச்சர் : ஜோ, நீ எழுதியிருக்கும் ‘எங்க வீட்டு நாய்’கட்டுரை சதீஷோடது போலவே இருக்கு?
ஜோ : எங்க வீட்டுலயும் அதே மாதிரியான நாய்தான் டீச்சர் இருக்கு