வாழ்க்கையை மாற்றும் பொன்மொழிகள்

Image

வார்த்தைகளே வரம்

நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள். ஏனென்றால் பேசும் ஒவ்வொறு வார்த்தைகளிலும் சக்தி உள்ளது. நாம் எப்பொழுதும் நேர்மறை சொற்களைப் பேசும்பொழுது நமக்கு நன்மைகள் நடைபெறும். எதிர்மறைச் சொற்கள் பேசும்போது தீமைகளை மற்றும் தீமையாக முடியும். அந்த வகையில் ஒரு சில பொன்மொழிகள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். அத்தகைய நல்ல பொன்மொழிகளை அறிந்துகொள்வோம்.

உன்னைத் தவிர உன்னை யாரும் அழிக்க முடியாது. உன்னை தவிர உன்னை யாரும் காப்பாற்ற முடியாது. –  ஓஷோ

மகிழ்ச்சியான நாள் என்று நீங்களே உருவாக்கிக் கொள்ளும் வரை, மகிழ்ச்சியான நாள் என்று உங்கள் வாழ்க்கையில் வரப் போவதில்லை……!!  – ஜனனி ~

பிறிதொரு பொழுதில் உங்கள் பைத்தியக்காரத்தனங்களை எண்ணி சிரிப்பதற்கேனும் காதலியுங்கள். –  யாதுமானவன்

நம் பயம் எதிரிக்குத் ‘தைரியம்’… நம் அமைதி அவனுக்குக் ‘குழப்பம்’… குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை…!! –  தமிழினியன்

எங்கு நம்பிக்கை இருக்கிறதோ அங்கு அற்புதங்கள் நிகழும். – லக்ஷ்மி சரவணகுமார்

மனது எல்லைகளை மட்டுமே பார்க்கும். அன்புக்கு மட்டுமே எல்லைகளை கடந்து செல்கிற ரகசிய பாதை தெரியும் . – ரூமி

ஒருவனுக்கு உங்களால் எதையும் கற்றுக் கொடுக்க முடியாது; அவன் தானாகவே தனக்குள் அதைக் கண்டுபிடிக்க அவனுக்கு உங்களால் உதவ மட்டுமே முடியும் – கலிலியோ

நம்பிக்கையைத் தன்னுள் தேட முயலாமல், வெளியில் தேடுவதுதான் பலர் செய்யும் மிகப்பெரிய தவறு – ஆர்தர் மில்லர்

அம்மா தனக்காக சமைத்ததும் இல்லை அப்பா தனக்காக சம்பாதித்ததும் இல்லை  – யாழினி

அடுத்தவர் பிடிவாதத்தை திமிர் என்றும்…. தன்னுடைய பிடிவாதத்தை மன உறுதி என்றும் அழகாக பிரிக்கிறான் மனிதன்….!! –  ஜனனி

Leave a Comment