மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

Image

எளிய தமிழில் சித்தர் தத்துவம்

தமிழ் மண்ணில் பதினெட்டு சித்தர்கள் மட்டுமல்ல, நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞான சித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள் என்று ஆயிரமாயிரம் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

சித்தர்களின் பாடல்கள் மனோரஞ்சிதப் பூக்களைப் போன்றவை. அதாவது, மனம் விரும்பும் அத்தனை வாசனையையும் இந்த பூக்களில் நுகர முடியும். மனோரஞ்சிதப் பூக்களைப் போன்று சித்தர் பாடல்கள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வகை அனுபவம் தருபவை.

மனிதர்கள் நல்லவண்ணம் வாழ வேண்டும் என்பதே சித்தர் பாடல்களின் முதல் விருப்பம். அதனாலே உடல் எனும் அதிசயத்தை ஆலயமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தார்கள். இறைவனை வெளியே தேடாமல் உள்ளே தேடச் சொன்னார்கள்.

சித்தர் பாடல்களுக்கு நிறைய பேர் உரை எழுதியிருக்கிறார். நான் ஜென் குட்டிக் கதை பாணியில் சித்தர் பாடல்களை எளிய தமிழில் விளக்கியிருக்கிறேன். படித்துப் பாருங்கள், சித்தர்களின் மகிமை புரியும்.

வெளியீடு : ஞானகுரு பதிப்பகம். 180 பக்கம். விலை 250 ரூபாய்.

அலைபேசி 80725 89355 எண்ணுக்கு பணம் அனுப்பி முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.

Leave a Comment