கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்துகொண்டு சென்னைக்குத் திரும்பினார் இயக்குனர் பாக்கியராஜ். இரவு வரை நண்பர்கள், இயக்குனர்களை வீட்டில் சந்தித்து சகஜமாகப் பேசிவிட்டுத் தூங்கினார்.
காலை எழுந்து வாக்கிங் சென்றபோது, மார்பு வலியுடன் மயக்கம் வந்திருக்கிறது. மருத்துவமனைக்குப் போகும் வழியிலே பாக்யராஜின் உயிர் பிரிந்துவிட்டது. சினிமாவின் ஒன் மேன் ஆர்மி, திரைக்கதை மன்னன், எம்.ஜி.ஆரின் வாரிசு என்றெல்லாம் புகழப்பட்டவர்.
எத்தனை பெரிய ஆளுமை என்றாலும், எவ்வளவு பணம் வைத்திருப்பவர் என்றாலும், இவ்வளவுதான் வாழ்க்கை. இந்த நிலையாமையே வாழ்க்கையின் தத்துவம்.
மனிதர்கள் அனைவருமே இந்த பூமிக்கு வந்த விருந்தினர்கள். ஒரு டூரிஸ்ட் மனநிலையில் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிப்பதே சரியான வழி. இன்னும் கொஞ்சகாலமே இங்கு வாழப்போகிறோம் என்ற தெளிவு வந்துவிட்டால் யாரையும் பகைத்துக்கொள்ளாமல் எல்லோரையும் அன்புடன் பார்க்க முடியும்.
எதையும் கொண்டுவரவில்லை. இங்கு சம்பாதித்த எதையும் கொண்டுபோகவும் முடியாது. எனவே, இப்போது என்ன இருக்கிறதோ, அதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். இன்று சம்பாதிப்போம், நாளை மகிழ்ச்சி அடையலாம் என்று தள்ளிப்போட்டால், நாளை வராமலே போய்விடலாம்.
நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம் என்ற தத்துவத்தைப் புரிந்துகொண்டு, இன்றைய தினத்தில் வாழ்வதே சிறப்பு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
