என்ன செய்தார் சைதை துரைசாமி – 253
அதிகாரிகள் நீட்டும் ஃபைல்கள் எதுவாக இருந்தாலும் கையெழுத்துப் போடும் மேயராக சைதை துரைசாமி ஒருபோடும் இருந்ததே இல்லை. எந்தவொரு விஷயம் என்றாலும், அதன் முந்தைய தகவல்கள், தற்போதைய நிலை, எதிர்கால நிலவரம் ஆகிய அனைத்தும் அறிந்த பிறகே கையெழுத்துப் போடுவார். அப்படி பேருந்து நிழற்குடைக்கு மேயர் சைதை துரைசாமி நடத்திய சட்டப் போராட்டம் இன்றும் மாநகராட்சி அதிகாரிகளால் பாராட்டப்படுகிறது.
முன்பு பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் எம்.டி.சி. எனப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வசமும் குறைந்த எண்ணிக்கையிலான நிழற்குடைகள் மட்டுமே சென்னை மாநகராட்சி வசமும் இருந்தன. அதனால் எம்.டி.சி. நிறுவனம் பெரும்பாலான நிழற்குடைகளை விளம்பரதாரர்களிடம் ஒப்படைத்து, பேருந்து நிழற்குடைகளில் இருந்து வருமானம் ஈட்டிவந்தது.
ஆனால் விளம்பரதாரருக்கும் எம்.டி.சிக்கும் ஏற்பட்ட பிரச்னையால் விவகாரம் நீதிமன்றம் சென்றது. அங்கு, நிழற்குடைகள் மீது மாநகராட்சிக்கு மட்டுமே உண்டு என்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த நிலையில் விளம்பரதாரர் மேல்முறையீடுக்கு உச்ச நீதிமன்றம் சென்றார். அப்போது பேருந்து நிறுத்தம் மீதான உரிமையை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மாநகராட்சி சார்பில் யாரும் அக்கறை செலுத்தவில்லை.
ஆகவே, எம்.டி.சி. நிறுவனமும் விளம்பரதாரரும் கோர்ட்டுக்கு வெளியே பிரச்னையைத் தீர்ப்பதாக சொல்லி, தங்களுக்குள் வருவாயை பகிர்ந்துகொள்வதற்கு முன்வந்தனர். இதையும் மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. ஆகவே, பேருந்து நிழற்கொடைக்கும் மாநகராட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையே நிலவியது. இந்த நேரத்தில் சைதை துரைசாமி மேயராகப் பதவிக்கு வந்தார். பேருந்து நிழற்கொடை விஷயத்தில் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டு அதிர்ந்தார்.
- நாளை பார்க்கலாம்.