வாய் விட்டு சிரிங்க

Image

ஜோக்ஸ்

”பிச்சைக்காரனையெல்லாம் ஆபரேஷன் தியேட்டருக்கு உள்ளே விட்டது யார்?”_

‘‘டாக்டர், அவர் உயிர்ப் பிச்சை கேட்குறாரு!’’

…………………….-

‘‘7வது வீட்ல ராகு பார்ப்பதால், உங்க பொண்ணுக்கு நல்ல யோகம்!’’_

‘‘அப்பா, ஜோசியர் தப்பா சொல்றார். அவரு பேரு ராகு இல்ல, ரகுப்பா…!’’_

……………………….

‘‘உன்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா, ஒரு கழுதையைக் கட்டியிருக்கலாம்!’’_

‘‘நல்ல வேளை நீங்க அப்படிச் செய்யலை. நெருங்கிய சொந்தத்துல பொண்ணு கட்டுறது தப்புங்க!’’_

………………………..

‘‘உண்மையைச் சொல்லுடா… இல்லைன்னா, எலும்பை எண்ணிடுவேன்!’’_

’’அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன்ல ஏற்கனவே எண்ணிட்டாங்க. போன் பண்ணிக் கேட்டுக்குங்க சார்’’

………………………….

’’எனக்கு என் மனைவி வீட்டிலே இல்லைன்னா,  கை ஒடிஞ்ச மாதிரி இருக்கும்..!’’

’’அது பரவாயில்லையே.  என் மனைவி வீட்டிலே இருந்தால்தான் கை ஒடியும்..!’’

………………………

’’நிதி நிலை சரியில்லை அமைச்சரே…!’’

’’அதற்காக அகழியில் முதலைக்குப் பதில் வீரர்களை முதலை வேஷம் போட்டு நீந்த வைக்கலாம்கறது ரொம்பவே ஓவர் மன்னா…’’

………………………….

-‘‘நம்ம காதல் கண்டிப்பா கல்யாணத்துலதான் முடியும் மகேஷ்!’’

’’அப்படின்னா, இப்பவே நாம  பிரிஞ்சிடலாம் லதா..!’’

Leave a Comment