என்ன செய்தார் சைதை துரைசாமி – 284
மாநகராட்சி நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை மீட்பதற்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட நடவடிக்கைகள் போலவே, வேறு அரசு துறைகளில் இருந்து மாநகராட்சிக்குத் தேவையான இடங்களை கேட்டுப் பெறுவதற்கும் தீவிர முயற்சிகள் எடுத்தார். நிலம் கேட்டு கடிதம் எழுதுவதுடன் நின்றுவிடாமல் குறிப்பிட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து இடம் பெறுவதற்குத் தொடர் முயற்சிகள் மேற்கொண்டார். அதனாலே, மேயர் சைதை துரைசாமி காலத்தில் ஏராளமான நிலங்கள் சென்னை மாநகராட்சிக்குப் பெறப்பட்டன.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திடமிருந்து ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரில் 12480 ச.மீ பரப்பளவு தார் சாலை மற்றும் 6695 ச.மீ. சிமெண்ட் நடைப்பாதைக்காக நிலம் பெறப்பட்டது. இதே பகுதியில் ஆரம்பப் பள்ளிக்கு 1903 ச.மீ பரப்பளவும், உயர் நிலைப் பள்ளிக்கு 0.32 ஹெக்டர்ஸ் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக 1766 ச.மீ பரப்பளவு நிலமும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் இருந்து மாநகராட்சிக்காக பெறப்பட்டது.
குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்காக 491 ச.மீ காலி இடம் மற்றும் 215 ச.மீ. பரப்பளவு கொண்ட கட்டிடமும் சைதை துரைசாமியின் சீரிய முயற்சியால் பெறப்பட்டது. இதே ஒக்கியம் துரைப்பாக்கம் அவசர சுனாமி மறு குடியமர்வு திட்டத்தின் கீழ் வாரியத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்ட திட்டப்பகுதியில் அமைந்துள்ள சிமெண்ட் சாலைகளின் 17905 ச.மீ பரப்பளவு, மழலையர் பள்ளி 213.70 ச.மீ பரப்பளவு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 427.81 ச.மீ. பரப்பளவு கொண்ட நிலம் பெறப்பட்டது
சென்னை மாநகராட்சி – நிலம் மற்றும் உடைமைத் துறை மூலம் அத்திப்பட்டு கிராமத்தில் 1114 ச.மீ. பரப்பளவு நிலம் மாநகராட்சி சாலைக்காக பெறப்பட்டது. பெரம்பூர் வட்டம் – சேலைவாயில் கிராமம் சாலைக்காக 905.24 ச.மீ. பரப்பளவு கொண்ட நிலம் பெறப்பட்டது. அம்பத்தூர் வட்டம், போரூர் கிராமத்தில் 1220 ச.மீ. பரப்பளவு கொண்ட நிலம் பெறப்பட்டது.
சென்னை மாநகராட்சி – நிலம் மற்றும் உடைமைத்துறை, ஆதம்பாக்கம் கிராமத்தில் திறந்தவெளி நிலத்திற்காக 107.57 ச.மீ. பெறப்பட்டது. கொட்டிவாக்கம் கிராமம், சோழிங்கநல்லூர் தாலுக்காவில் திறந்தவெளி நிலத்திற்காக 1680 ச.மீ. நிலம் பெறப்பட்டது. இவை தவிர சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் இருந்து பணித்துறை மூலமாக மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து 460 கோடி மதிப்புள்ள 10,95,526 சதுர அடி நிலம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தனை அதிகமான நிலங்கள் வேறு எந்த ஒரு காலத்திலும் மாநகராட்சி கேட்டுப் பெற்றதில்லை என்பதும், இதற்கு மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட தீவிர முயற்சிகளே முக்கியக் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- நாளை பார்க்கலாம்.