ஆச்சர்யம் ஆனால் உண்மை
மனைவிக்காக தாஜ்மஹால் கட்டிய ஷாஜகானை நமக்குத் தெரியும். அதேபோல் மனைவிக்காக ஒரு மனிதர் நிலவில் இடம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த தர்மேந்திரா அனிஜா, தன் மனைவிக்காக நிலவில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதை அவருக்கு திருமணப் பரிசாக அளித்துள்ளார். பிரேசிலில் வசித்துவரும் இவர், தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். தர்மேந்திரா தமது மனைவி சப்னாவுக்கு திருமண நாள் கேக் வெட்டியதும் மணநாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கிய பதிவுச் சான்றிதழை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
நிலவில் வசிப்பதற்கான குடியுரிமையுடன் நிலம் வாங்கியதற்கான சான்றிதழை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க லூனர் சொசைட்டி என்ற நிறுவனம் விற்றுள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், டாம் குரூஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும், நிலவில் இடம் வாங்கிப் போட்டுள்ளனர். பீஹாரைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் குமார், நிலவில் 1 ஏக்கர் நிலத்தை 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
