தீயணைப்புத் துறைக்கு நிலம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி  261

வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் பகுதியில் மக்கள் நெரிசலும், வாகனப் போக்குவரத்தும் அதிகம்.  எனவே, இந்த பகுதியில் இடத்தை விஸ்தீரணம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் இருக்கும் இடத்தையே சுருக்கி, மடக்கி ஏகப்பட்ட கட்டுமானங்கள் உருவாகின்றன. அதனால் இந்தப் பகுதியில் சிறிய அளவில் தீ விபத்து போன்ற அசம்பாவிதம் ஏற்படும் நேரத்தில், இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்துவந்தது.

மேயர் சைதை துரைசாமிக்கு தொலைநோக்குப் பார்வை உண்டு. அதோடு, எதையும் வருவதற்கு முன்னரே திட்டமிடவும் விரும்புவார். ஆகவே, நெரிசல் நிறைந்த தி.நகர் பகுதியில் தீயணைப்புத் துறைக்கு இடம் கொடுத்தால், ஆபத்தை விரைந்து தடுக்க முடியும் என்று திட்டமிட்டார். ஆகவே, தி.நகர் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறைக்கு இடம் ஒதுக்கீடு செய்துதர சைதை துரைசாமி முன்வந்தார். 

தீயணைப்புத் துறையின் ராட்சஷ வாகனம் சென்றுவரும் வகையில் நிலம் தேவைப்பட்டது. இதற்கும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது,  அதிக மதிப்பு வாய்ந்த தி.நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தீயணைப்புத் துறைக்கு தாரை வார்க்கக்கூடாது என்று அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர்.

மாநகராட்சிக்கு சொத்தாக இடம் இருப்பதை விட, அந்த இடம் மக்களுக்குப் பயனுள்ளதாகவும், ஆபத்தைத் தடுப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். ஆகவே, பெருநகர சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான தி.நகர் 13-வது வார்டில் 4,553 ச.அடி நிலத்தை தீயணைப்புத் துறைக்கு நில மாற்றம் செய்தார்.

மேயர் சைதை துரைசாமியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்களும் வியாபாரிகளும் மனமுவந்து  பாராட்டினார்கள்.  மக்கள் பாதுகாப்பில் மேயர் சைதை துரைசாமி ஒருபோதும் சமரசரம் செய்துகொள்ள மாட்டார் என்பதற்கு இந்த சம்பவமே நல்ல சாட்சி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment