எண்சாண் உடம்புக்கே வலு சேர்க்கிற காய் என்றால், அது வெண்டைக்காய்தான். முக்கியமாக, நம்முடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கினால்தானே அனைத்துச் செயல்களையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதுக்கு, இந்தக் காயை அவசியம் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மாணவர்களுக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. அதேபோல், முதியவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது இயற்கைதான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் வெண்டைக்காய் கொண்டுள்ளது. எனவே, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும்கூட அடிக்கடி வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
இன்றைய டிஜிட்டல் உலகில், பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் சிலருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதற்கு, வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்படத் தொடங்கும். ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. மேலும், தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். இதற்கும் வெண்டைக்காய் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. அதே நேரத்தில், உடலின் எடையும் ஸ்மார்ட்டாக சமச்சீராகிறது.
இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். மேலும், சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்..
வெண்டைக்காய் இல்லீங்க, மூளைக்காய்..!

Tags |
#believe#breakingnews#confidence#gyaanaguru#innovation#latesttamilnews#livetamilnews#magizchi#manthirasol#motivation#motivational#newstodaytamil#quote#quoteoftheday#selflove#skmurugan#tamil#tamillatestnews#tamillivenews#tamilnadunews#tamilnews#tamilnewsheadlines#tamilnewslive#tamilnewsonline#tamilnewstoday#tamiltrending#todaynews
