• Home
  • தமிழ் லீடர்
  • கொல்கத்தா டாக்டர் முகம், வாய், கழுத்து முழுக்க ரத்த காயங்கள்

கொல்கத்தா டாக்டர் முகம், வாய், கழுத்து முழுக்க ரத்த காயங்கள்

Image

நிர்பயா 2க்கு நியாயம் கிடைக்குமா?

கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜி ஒரு பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்ற முயற்சி எடுத்ததாக போராட்டம் வலுக்கிறது.

.கொல்கத்தா ஆர்.ஜி.கார் மெடிக்கல் கல்லூரி மருத்துவமனையில்  இரண்டாம் ஆண்டு முதுகலை படிப்பு படித்து வந்த மருத்துவர் நிர்பயா 2, ஆகஸ்ட் 10ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கொடூரமான முறையில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை அறிந்த நிர்வாகம், பெற்றோர்களுக்கு முதலில் அவர்களுடைய மகள் தற்கொலைசெய்துகொண்டதாக அறிவித்திருக்கிறார்கள். அதன் பிறகு அனைத்து தடயங்களையும் காவல்துறையினர் அழித்துவிட்டு சிபிஐ வசம் கேஸை ஒப்படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இதை எதிர்த்து டாக்டர்கள், பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம் சூடு பிடித்திருக்கிறது.

என்ன நடந்தது என்று மேலோட்டமாகப் பார்க்கலாம்.

ஆகஸ்ட் 10

நள்ளிரவு 2 மணி : மருத்துவர் நிர்பயா 36 மணி நேர ஆன் டியூட்டியில் இருந்துள்ளார். நண்பர்களுடன் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு செமினார் ஹாலுக்குப் போயுள்ளார். படித்து இளைப்பாற. இரவு நேர டியூட்டி பார்க்கும் மருத்துவர்களுக்கு தூங்குவதற்கு போதிய இட வசதி இல்லை என்பதால் அங்கு போயிருக்கிறார்.

அதிகாலை 4 மணி : மூன்று பேரா அல்லது நான்கு பேரா என்று உறுதி செய்யப்படாத ஒரு குழு அங்கு நுழைந்திருக்கிறது. தனியே இருந்த நிர்பயாவை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என்று கொடூரமாக கொலை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

பகல் 10 மணி :

மருத்துவர் நிர்யா ஆடை எதுவும் எல்லாமல் அலங்கோலமாகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டும் கிடப்பதை பார்த்து நிர்வாகத்தில் தெரிவிக்கிறார்கள். அவரது கால்கள் 90 டிகிரியாகக் கிடந்திருக்கிறது. பயிற்சி மருத்துவர்கள், டாக்டர்களிடம் பதட்டம் அதிகரிக்கிறது.

பகல் 11 மணி

இறந்து போன மருத்துவர் உடல் முழுவதும் கடுமையான ரத்தக் காயங்களும் திட்டமிட்டு கொடூரமாகத் தாக்கியதும் தெரியவந்துள்ளது. மருத்துவர் நிர்பயா உடலுக்கு போஸ்ட்மார்டம் செய்யாமல் காலம் தாழ்த்திவருவதை அறிந்து மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். செமினார் ஹாலில் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் கூடுகிறார்கள்.

மாலை 4 மணி

நிர்பயாவின் பெற்றோர் வருகிறார்கள். அவர்களிடம் நிர்பயா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதோடு அவருக்கு சைக்கோசிஸ் நோய் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதை பெற்றோர் ஏற்கவில்லை, என்பதால் மாணவர்களும் பயிற்சி மருத்துவர்களும் கோபமாகிறார்கள்.

இரவு 10 மணி

நிர்பயாவின் கார் யாரோ சிலரால் அடித்து நொறுக்கப்பட்டு, உள்ளே இருந்து சில ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது. காருக்கு பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இதற்குள் நாடு முழுவதும் செய்தி பரவி பெரும் போராட்டமாக வெடிக்கவே வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொடூரத்துக்கு இந்த கல்லூரியின் முன்னாள் தலைவர் சந்தீப் கோஷ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வாங்கித்தருவோம் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசினாலும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மாணவர் போராட்டம் தொடர்கிறது. உண்மை வெளியே வரட்டும்.

Leave a Comment