மளமளவென எண்ணிக்கை உயர்ந்த மழலையர் பள்ளிகள்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 140

மழலையர் பள்ளி என்ற அஸ்திவாரத்தை மாற்றி அமைக்காமல் மாநகராட்சி பள்ளியில் எந்த மாற்றமும் நிகழாது என்பதை மேயர் சைதை துரைசாமி தெளிவாக அறிந்துகொண்டார். மாநகராட்சியில் மழலையர் பள்ளிகள் போதிய அளவு இல்லாத காரணத்தாலும், அந்த பள்ளிகளும் பொலிவாக இல்லாத காரணத்தாலுமே மக்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்பதும், இதற்காக தங்கள் தகுதிக்கு மீறி செலவழிக்கிறார்கள் என்பதும் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

ஆகவே, மழலையர் பள்ளிகள் உருவாக்கத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்க விரும்பினார் சைதை துரைசாமி. ஆகவே, மாநகராட்சி சார்பில் 281 பள்ளிகள்  இயங்கிவரும் நிலையில், எத்தனை மழலையர் பள்ளிகள் இருக்கின்றன என்று கேட்டார். அப்போது தான், மொத்தமே 30 மழலையர் பள்ளி மட்டுமே இயங்கிவருவது தெரியவந்தது. 427 கி.மீ. பரப்பளவு கொண்ட பெருநகர சென்னைக்கு இந்த எண்ணிக்கை கொஞ்சமும் பொருத்தமே இல்லை என்பதால் 200 வார்டுகளிலும் உடனடியாக ஒரு மழலையர் பள்ளிகள் தொடங்குவதற்கு உத்தரவு போட்டார்.

அதோடு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மழலையர் பள்ளிகளை கவர்ச்சியாக வடிவமைப்பதற்கும் வழிவகை செய்தார். இப்படி மழலையர் பள்ளிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதை மேயர் சைதை துரைசாமியின் கல்விப் புரட்சி என்றே சொல்லலாம். இதன் காரணமாக மாநகராட்சிப் பள்ளி மாணவர் சேர்க்கையில் நல்ல மாற்றம் உருவானது. ஆண்டு தோறும் மாணவர் எண்ணிக்கை குறைந்துவந்த நிலைமை மாறியதுடன் நில்லாமல், ஆண்டுக்கு 8,000 மாணவர்கள் சேரும் அளவுக்கு மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மரியாதை கிடைத்தது.

மேயராக சைதை துரைசாமி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை காரணமாகவே இழுத்து மூடப்படும் நிலையில் இருந்த மாநகராட்சிப் பள்ளிகளுக்கு விடிவுகாலம் கிடைத்தது. சைதை துரைசாமியின் இந்த உடனடி நடவடிக்கைக்கு கல்வியாளர்களிடம் பலத்த பாராட்டும் வரவேற்பும் கிடைத்தது.

  • நாளை பார்க்கலாம்.  

Leave a Comment