• Home
  • ஞானகுரு
  • நாய் வளர்ப்பது குரூரத்தனம் – ஞானகுரு

நாய் வளர்ப்பது குரூரத்தனம் – ஞானகுரு

Image

சென்னை மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, அங்கு புகழேந்தி என்பவர் அழைத்துவந்த இரண்டு ராட்வைலர் வகை நாய்கள் திடீரென கடித்துக் குதறியது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று சென்னை அருகே நாவலூரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வளாகத்தில் உள்ள பூங்கா அருகே கிரிஷ் என்பவர் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் வேலாயுதம் என்பவர் பொமரேனியன் நாயுடன் வந்தபோது, குழந்தையின் வலது கை விரலை கடித்தது.

இதேபோல் தெரு நாய்களால் கடிபட்டு தினமும் ஏராளமான மக்கள் அவதிப்படுகிறார்கள். தெரு நாய்களுக்கு உணவு அளிக்கிறோம் என்று பலரும் தங்கள் வீட்டு சாதத்தை தெருவில் கொட்டி வைப்பதால் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதோடு அவ்வப்போது பிஸ்கெட் போன்ற உணவுப் பொருட்களையும் தெரு நாய்களுக்குப் போடுகிறார்கள். இப்படி தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவர்களை இப்போது பலரும் திட்டுகிறார்கள்.

இது குறித்து ஞானகுருவிடம் கேள்வி எழுப்பினார் ஞானகுரு.

‘’நாய்க்கு உணவு போடுவதை அதுவும் தெரு நாய்களுக்கு உணவு போடுவதை மிருகாபிமானம் என்று நினைக்கிறார்கள். பிற உயிர்கள் மீது அன்பு காட்டுவது நல்ல விஷயம். ஆனால், தெரு நாய்களுக்கு உணவு போடுவதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைப்பது அவர்களுடைய பொறுப்பின்மையைக் காட்டுகிறது.

உண்மையில் நாய், பூனை என்று எந்த விலங்கையும் மனிதர்கள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதே தவறு. அது மனதின் குரூரத் தன்மையின் வெளிப்பாடு. தான் சொல்வதைக் கேட்பதற்கும், சொல்வதைச் செய்வதற்கும் அடிமை சிக்கியிருக்கிறது என்ற மனநிலையிலே நாயைக் கொஞ்சுகிறார்கள். நாய் வளர்ப்பது மனிதன் வேலை இல்லை. எனவே, அதிலிருந்து விலகி நிற்பதே நல்லது.

தெரு நாய்க்கு பிறகு யார் உணவளிப்பது என்று கேள்வி எழுப்புவது மூடத்தனம். கரப்பான் பூச்சிக்கும் கொசுவுக்கும் நீங்கள் தான் உணவு அளிக்கிறீர்களா..? பிற உயிர்களை வளர்ப்பது என்பது அந்த உயிருக்கு செய்யும் தீமையே தவிர நன்மை இல்லை’’ என்றார் ஞானகுரு.

Leave a Comment