• Home
  • அரசியல்
  • தி.மு.க. பவள விழாவில் கருணாநிதி அறிமுகம்

தி.மு.க. பவள விழாவில் கருணாநிதி அறிமுகம்

Image

சீனியர்களுக்கு வழியனுப்பு, சின்னவருக்கு வரவேற்பு

சென்னையில் நடந்த திமுகவின் முப்பெரும் விழா மெகா சக்சஸ் என்று தி.மு.க.வினர் கொண்டாடி வருகிறார்கள். மேடையில் இரண்டு பெரிய நாற்காலிகள் போடப்பட்ட நிலையில் அதில் ஒன்றில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்கள் ஏ ஐ தொழில்நுட்பத்தின் வாயிலாக பேசியது செம வைரலாகியிருக்கிறது.

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…’ என்று கருணாநிதியை மீண்டும் பேச வைத்து, தொழில் நுட்பத்தை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்த சிந்தனைக்கு எந்தக் கட்சியும் இன்னமும் வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பவள விழா மேடை என்பது சீனியர்களுக்கு மதிப்பு கொடுப்பதற்கு போடப்பட்ட மேடை அல்ல, சின்னவர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று சீனியர்களை வைத்து கெஞ்சுவதற்கும், சில சீனியர்களுக்கு வழியனுப்புவதற்கும் நடத்தப்பட்ட விழா என்று தி.மு.க.வில் விபரம் அறிந்த சிலர் கூறுகிறார்கள்.

இதுகுறித்து பேசுபவர்கள், ‘’சமீபத்தில் தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் பழனிமாணிக்கத்துக்கும் சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் ஜெகத்ரட்சகனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. இந்த இருவருக்கும் உச்சபட்ச அங்கீகாரம் கொடுத்து கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முடிவு எடுத்திருக்கிறார்கள். அதனாலே அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தலைமையால் ஓரங்கட்டப்பட்டாலும் வேறு கட்சியில் நுழைந்துவிட முடியாத அளவுக்கு லாக் செய்திருக்கிறார்கள்.

அதோடு இந்த விழாவில் பா.ஜ.க.வை எதிர்த்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமியை கண்டுகொள்ளவே இல்லை. இதன் மூலம் மும்முனைப் போட்டிக்கு வழிவகுத்துள்ளனர். இதன் மூலம் 2026 தேர்தலில் எளிதாக வெற்றி அடைந்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார் ஸ்டாலின்.

கூட்டணிக் கட்சிகளை தக்கவைப்பதில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது என்பதையும் ஸ்டாலின் புரிந்து வைத்திருக்கிறார். அதனால் வரும் 8 ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரையும் அழைப்பதற்குத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் ஸ்கெட்ச் சிறப்பாக போட்டு வேகமாகப் போகிறார் ஸ்டாலின்.

Leave a Comment