• Home
  • அரசியல்
  • உதயநிதி பதவியேற்பை புறக்கணித்த கனிமொழி..!

உதயநிதி பதவியேற்பை புறக்கணித்த கனிமொழி..!

Image

‘லேட்’ வருகை கட்சிக்குள் கலகம் ஆரம்பம்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நேரத்திலேயே கடுமையான அதிருப்தியில் இருந்தார் கனிமொழி. ஆனால், அவரை கண்டுகொள்ளாமல் பதவியேற்பு வைபவம் நடைபெற்றது. அதே வழியில் குடும்பத்தில் யாருடனும் கலந்து பேசாமல் உதயநிதியை துணை முதல்வராக்கி இருப்பது கனிமொழி வட்டாரத்தை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த ஏற்பாடுகள் உறுதியானதை அடுத்தே திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழாக் கூட்டத்தை கனிமொழி புறக்கணிப்பு செய்தார். டெல்லியில் சீத்தாராம் ஜெய்ச்சூரி நினைவு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டதாலே அவர் வரவில்லை என்ற சலசலப்பு எழுந்தது. ஆனாலும் கனிமொழியை கண்டுகொள்ளாமல் துணை முதல்வர் பதவியேற்புக்கு தேதி குறிக்கப்பட்டது.

அதனாலே துணை முதல்வராக உதயநிதி பதவி ஏற்புக்கு கனிமொழி வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்று உதயநிதி ஆசிர்வாதம் வாங்கினார். அங்கு கனிமொழி இருந்தார். ஆனால், அவர் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளவில்லை. எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் புறக்கணிப்பு செய்திருக்கிறார். அதேநேரம், இந்த கட்சியில் நானும் இருக்கிறேன் எனக்கும் உரிமை இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் லேட்டாக வருகை தந்து எல்லோருக்கும் ஜெர்க் கொடுத்திருக்கிறார்.

உதயநிதி பதவியேற்பில் சீனியர்கள் எக்கச்சக்க மன வருத்தத்தில் இருக்கிறார்கள் என்றாலும் யாரும் வெளிப்படையாக அதிருப்தி தெரிவிக்கவில்லை. அனைவரது ஆசிர்வாதத்துடன் உதயநிதி துணை முதல்வர் ஆகிறார் என்று ஸ்டாலின் கட்டமைத்த பிம்பம் இப்போது உடைந்து நொறுங்கியிருக்கிறது. தி.மு.க. என்பது வலிமையான கோட்டை அல்ல, எதிர்ப்பதற்கு கனிமொழி இருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

இனியும் கனிமொழி அமைதியாக இருக்க மாட்டார் என்கிறார்கள். சீனியர்கள் ஒருங்கிணைப்பு, ஆதரவு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு சட்டசபை நேரத்தில் 25% சீட் கேட்பதில் உறுதியாக இருக்கிறாராம். அப்படி இல்லை என்றால் கட்சியை உடைக்கவும் தயங்கமாட்டார் என்கிறார்கள். பார்க்கலாம்.

Leave a Comment