சக்சஸ் சிக்கல்கள்
சக்சஸ்ஃபுல் மனிதராக மாற விரும்பும் ஆண்கள் ஒருபோதும் இந்த ஐந்து தப்புகள் மட்டும் செய்யவே கூடாது. இவற்றை கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடித்தால் வாழ்க்கை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பது உறுதி.
- நெருங்கிய நண்பர்கள் தப்பு செய்யும் நேரத்தில் அவர்களிடமிருந்து சைலன்ட் ஆக விலகிவிடுங்கள். சண்டை போட்டு அவரை எதிரியாக மாற்றிவிடாதீர்கள். நண்பர் எதிரியாக மாறிவிட்டால், அவரை ஜெயிப்பது ரொம்பவே கடினம்.
- வெற்றி, பதவி அல்லது அங்கீகாரம் கிடைத்தவுடன் உழைப்பதை நிறுத்திவிடாதீர்கள். வெற்றியை விட அதை தக்கவைப்பது ரொம்பவே கடினம். ஆகவே, வெற்றிக்குப் பிறகு இன்னும் கடுமையாக உழைக்கத் தயாராகுங்கள்.
- துக்கம், தோல்வியை பிறரிடம் காட்டாதீகள். தாடி, அலங்கோல ஆடைகளில் சோகத்தைக் காட்ட வேண்டாம். ஏனென்றால், யாரும் உங்களைக் காப்பாற்ற வரப்போவதில்லை. துயரமான நேரத்திலும் நல்ல ஆடை அணிந்து இயல்பாகக் காட்சியளியுங்கள். அந்த தன்னம்பிக்கையே உங்களுக்கு ஆறுதல் தரும்.
- உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சிக்கு நேரம் ஒதுக்காமல் பணத்தைத் தேடாதீர்கள். ஆரோக்கியமுடன் இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்கவும் அனுபவிக்கவும் முடியும்.
- தாய், தந்தையரை கவனிக்க முடிகிறதோ இல்லையோ, ஒருபோதும் அவர்கள் மனம் புண்படும் வகையில் நடக்காதீர்கள். ஏனென்றால் மகன் மீது பரிசுத்தமான அன்பு பொழிவது பெற்றோர்கள் மட்டுமே. இந்த உண்மையை தாய், தந்தை மரணத்துக்குப் பிறகே ஆண்கள் புரிந்துகொள்கிறார்கள்.
இந்த ஐந்து தவறுகளும் செய்யாத ஆண் வெற்றி மேல் வெற்றி பெற முடியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
