சும்மா சிரிங்க சாரே
கணவன் : உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கல்யாணம் பண்ணியிருக்கலாம்.
மனைவி : நான் அதைத்தானே கல்யாணம் முடிச்சிருக்கேன்.
…………………
நண்பன் 1 : டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
நண்பன் 2 : இப்பவாவது தெரியுதா நான் ஏன் எந்த ஜோசியரையும் நம்புறதே இல்லைன்னு. எல்லா பயல்களும் ஏமாத்துறானுங்கடா.
………………………….
மகன் : இந்தாங்கப்பா ரேங் கார்ட் கையெழுத்து போடுங்க
அப்பா: டேய், அஞ்சு சப்ஜெக்ட்லேயும் ஃபெயில் ஆயிட்டியா? இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாதடா
மகன்: சரி கோவிந்தராஜ், கையெழுத்து போடுங்க
………………………
கணவன் : சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி : சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன். ஆனா, கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன் : ஒண்ணும் பிரச்சினை இல்லம்மா. டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
………………….
நண்பன் 1 : நேற்று பொண்ணு பார்க்கப் போன இடத்துல பெரிய சண்டையாயிடுச்சு.
நண்பன் 2 : ஏண்டா, பொண்ணு வீட்ல பஜ்ஜி போடலையா?
நண்பன் 1 : இல்லடா, விஷயம் தெரிஞ்சு எப்படியோ என் பொண்டாட்டியும் அங்கே வந்துட்டா.
……………………….
காதலன் : இன்னிக்கு நைட் நாம ஊரை விட்டு ஓடிப்போயிடலாம்…
காதலி : என்னங்க, எனக்கு தனியா வர பயமா இருக்கு….
காதலன் : சரிம்மா, உனக்கு பயமா இருந்தா உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வந்துடு.
……………………………
நண்பர் 1 : தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுறா…
நண்பர் 2 : அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் 1: அவளோட தங்கச்சியைத்தான்….
………………………..
பிச்சைக்காரர்: அம்மா தாயே… வாய் பேசமுடியாத ஊமைம்மா… பிச்சை போடுங்க,
வீட்டுக்காரம்மா: அடுத்த வீட்டுக்குப் போப்பா, எனக்கு கண்ணும் தெரியலை, காதும் கேட்கல.
……………..