என்ன செய்தார் சைதை துரைசாமி – 164
உயர் கல்விக்கு இலவசக் கையேடு, போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் புத்தகம், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம் டி.என்.பி.எஸ்.சி. மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வு எதிர்கொள்வதற்குப் பயிற்சி வகுப்புகள் என்று மாணவர்களின் எதிர்காலத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார் மேயர் சைதை துரைசாமி.
தனியார் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகளில் எக்கச்சக்க பணம் வசூல் செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி தினமும் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வரும் அலைச்சலும் மாணவர்களுக்கு இருந்தன. இவை எல்லாம் விளிம்பு நிலையில் வாழும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தன. இதனை மாற்றிக் காட்டினார் மேயர் சைதை துரைசாமி. மாநகராட்சிப் பள்ளி வளாகத்திலேயே மனிதநேய அறக்கட்டளையைச் சேர்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
மாணவர்களின் எதிர்காலத்துக்கு சைதை துரைசாமியின் தொலைநோக்குப் பார்வைக்கு அவரது காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கின. மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று கல்லூரி இளநிலை முடித்த மாணவர்கள் மனிதநேயம் நடத்திய டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டனர். குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் அதிக அளவில் கலந்துகொண்டவர்களில். நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெற்று வேலையும் கிடைத்தன. மாநகராட்சிப் பள்ளியில் பயின்று இளநிலைக் கல்லூரி முடித்த மாணவர்கள் மனிதநேயத்தில் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மேற்கொண்டு முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறவும் செய்தார்கள். இந்த மகத்தான மாற்றம் சைதை துரைசாமியால் மட்டுமே நடந்தது.
தமிழகத்தில் மேயர் சைதை துரைசாமி தவிர வேறு எந்த அரசியல்வாதியும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியை எல்லோரும் தொழிலாகவும் வருமானம் ஈட்டும் வழியாகவும் பார்த்துவந்த நேரத்தில் சொந்தப் பணத்தைப் போட்டு மனிதநேய அறக்கட்டளை மூலம் உயர் கல்வி, நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கு விழிப்புணர்வு ஊட்டியவர் சைதை துரைசாமி மட்டும் தான். அதனாலே கல்வியாளர்கள் சைதை துரைசாமியின் கல்விப் பணியை இன்று வரை பாராட்டி வருகிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.