ஜெயலலிதா கொடுத்த சிறப்பு நிதி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 218

சென்னை மக்களுக்கு சாலைப் பயணம் பாதுகாப்பாகவும் நீண்ட காலம் பயனளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். அதனாலே சாலை மேம்பாட்டுக்கு என தனியாக ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இதனை அடைவதற்கு பல்வேறு இடையூறுகள் இருந்தாலும் விடாப்பிடியாக போராடி புதிய திட்டத்தைக் கொண்டுவந்தார்.

மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி,  இந்த சிறப்புத்  திட்டத்திற்கு  4 ஆண்டுகளில் தமிழக அரசினால் ரூ.1488 கோடியே 3 லட்சம் நிதி சென்னை மாநகராட்சிக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த நிதியில்  ரூ.1274.57 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இந்த நிதியில் ரூ.1032 கோடி உட்புற சாலைகளை மேம்படுத்தவும்,  திடக்கழிவு மேலாண்மை மேம்பாட்டிற்கும் அனுமதிக்கபட்டது.  ரூ.242.57 கோடி பேருந்து தட சாலைகள் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. 

சென்னை வரலாற்றில் இப்படியொரு திட்டம் அறிவிக்கப்பட்டது இல்லை என்பதால், இந்த நிதியினை மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். ஏனென்றால், சென்னை மக்கள் நல்ல சாலை பயணத்தை அனுபவித்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதாவது ஒரு புதிய சாலை போடப்படும். அது முழுமையாகப் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னரே, ஏதேனும் ஒரு பகுதியில் ஏதாவது ஒரு காரணத்துக்காக தோண்டிவிடுவார்கள். மின்சாரத் துறை, மழைநீர் வடிகால்வாய் துறையினர் அல்லது கம்பிவட சேவைப் பிரிவினர் என யாருக்காவது தேவை ஏற்படும் தருணத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் சாலையைத் தோண்டி புண்ணாக்கிவிடுவார்கள். அதை சரியாக மூடவும் மாட்டார்கள் என்பதால் புதிய சாலை போட்டதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழலை தடுக்க நினைத்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment