சிங்கப்பூர் பேச்சுக்கு ஜெயலலிதா பாராட்டு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 59

சிங்கப்பூர் மாநாட்டில் 168 நாடுகளைச் சேர்ந்த மாநகர மேயர்கள் முன்னிலையில், அம்மா உணவகம் உருவாக்கப்பட்ட நோக்கம் பற்றியும் அதன் மாபெரும் வெற்றி பற்றியும் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி பேசினார். எந்த நாட்டிலும் இப்படி ஒரு திட்டம் நடைமுறையில் இல்லை என்பதால் சைதை துரைசாமியின் பேச்சுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆர்வமாகக் கேட்ட மேயர்களிடம், ‘மக்கள் நலத்திட்டம் என்றாலும் அரசுக்கு மிகப்பெரும் செலவு இல்லை’ என்று சொன்னதுடன் நில்லாமல், ‘அம்மா உணவகத்திற்கான முதலீடு, செயல் திட்டம் மற்றும் மக்களுக்குக் கிடைக்கும் பலன்கள்’ பற்றி தெளிவாக விளக்கிக் கூறினார். அன்றைய விழாவின் ஹைலைட்டாக அம்மா உணவகம் அமைந்துவிட்டது.

சைதை துரைசாமி சென்னைக்குத் திரும்பியதும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அம்மா உணவகம் குறித்து மேயர் மாநாட்டில் பேசியது குறித்தும், அதற்குக் கிடைத்த வரவேற்பு பற்றியும் முழுமையாக விளக்கக் கூறினார்.

அதை கேட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘’அம்மா உணவகத்தின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிவிட்டீர்கள்… வாழ்த்துக்கள்’’ என்று பாராட்டினார். பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத்  திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் போன்று தன்னுடைய வாழ்நாள் சாதனையாக அம்மா உணவகம் அமைந்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment