என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 101
புரட்சித்தலைவி ஜெயலலிதா பெயரில் முதன்முதலாக ஒரு இலவசத் திட்டத்தைத் தொடங்கியவர் சைதை துரைசாமி தான். அது வரையிலும் ஜெயலலிதா பெயரில் யாரும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தியது இல்லை. அதனால் தான், சைதை துரைசாமி வேளச்சேரியில் கட்டிய, ’புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபம்’ திறப்பு விழாவில் மனநிறைவோடு கலந்துகொண்டார் ஜெயலலிதா.
திருமண மண்டபத்தைத் திறந்து வைத்து பேசிய புரட்சித்தலைவி ஜெயலலிதா, ‘’இன்று மகிழ்ச்சிகரமான நாள் மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபம் என்று அழைக்கப்படும், இந்த திருமண மண்டபத்தின் இனிய திறப்பு விழா.
மனிதாபிமானத்தின் மணி மகுடம் இதயத்தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், அந்த மகத்தான தலைவரின் கனவுகளை நனவாக்கி வரும், உங்கள் அன்பு சகோதரியாகிய என்னிடம், மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் இந்த இலவச திருமண மண்டபத்தை திறந்து வைக்கும் பொறுப்பை, நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள்.
சிறந்த மக்கள் நலத்தொண்டரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான அந்த சகோதரர் சைதை துரைசாமி அவர்கள், தனது சொந்த செலவில் இந்த திருமண மண்டபத்தைக் கட்டி நல்ல காரியங்களுக்கு இலவசமாக பொது மக்களுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் இந்த திருமண மண்டபத்தை பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறார். அதனை திறந்து வைக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். நானும் அதற்கு சம்மதித்தேன்.
இது சம்பந்தமாக விளம்பரங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்தன. அவ்வளவுதான் இன்றைய ஆட்சியாளர்களுக்குப் பொறுக்கவில்லை. உடனே இந்த திருமண மண்டபத்தையே இடிப்பதற்கு சென்னை கார்ப்பரேசனிடமிருந்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்று அது வரை சைதை துரைசாமி யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத விஷயத்தை பொதுமேடையில் அம்பலப்படுத்தினார்.
- நாளை பார்க்கலாம்.