- என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 39
அம்மா உணவகம் மூலம் ஏழைகள் பயன் பெறுவதும் அதன் மூலம் ஆட்சிக்கு புகழ் சேர்வதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரிந்திருந்தது. எனவே, அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் தொடங்கும் திட்டத்தை மேயர் சைதை துரைசாமி சொன்னதுமே ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஏழு அரசு மருத்துவமனைகளிலும், சென்னையின் 200 வட்டங்களிலும் தலா ஒன்று என 200 அம்மா உணவகங்களும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 200 அம்மா உணவகங்கள் படிப்படியாகத் தொடங்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் ஜெயலலிதா எந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டிருந்தார் என்பதற்கு, . மூன்றாம் கட்டமாக அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா பேசிய உரையே சாட்சி. அவர் பேசியதன் சுருக்கம் இது.
‘’குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசினை நானிலமே போற்றும்’’ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழகத்தின் தேவைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்ற அரசாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு விளங்குகிறது.
அந்த வகையில், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் விடுபட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில் அம்மா உணவகம், சென்னை மாநகராட்சி பகுதிகளில் திறந்துவைக்கப்பட்டது.
மக்களின் விருப்பத்தினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் ‘‘அம்மா உணவகங்களை’’ காணொலிக் காட்சி மூலம் நான் திறந்து வைத்தேன். இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து அகில உலக அளவில் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன’’ என்று முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் பேசினார்.
இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன..?
- நாளை பார்க்கலாம்.