ஜெயலலிதா கேட்ட குறுக்குக் கேள்வி

Image
  • என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 28

சைதாப்பேட்டையில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை மூலம்  சைதை துரைசாமி தொடங்கிய மலிவு விலை உணவகத்துக்கு மாபெரும் வரவேற்பும் புகழும் கிடைத்தது. ஏராளமான ஏழைகள் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்கள். ஆகவே, இதேபோன்று மலிவு விலை உணவகம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டால் மிகச்சிறந்த வகையில் ஏழைகளுக்குப் பயன் தரும் என்று அழுத்தமாக நம்பினார்.

இந்த சூழலில் பெருநகர சென்னைக்கு அ.தி.மு.க. மேயராக தேர்வு செய்யப்பட்டார் சைதை துரைசாமி. தன்னுடைய மனதில் இருந்த மலிவு விலை உணவகம் திட்டத்தை தமிழகம் முழுக்க கொண்டுசெல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி அடைந்தார்.

ஒரு சரியான நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். தான் சைதாப்பேட்டையில் நடத்திவரும் மலிவு விலை உணவகத்தின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கி, மிகக் குறைந்த விலையில் அதே போல் தமிழகம் முழுக்க மலிவு விலை உணவகத்தை அரசுத் திட்டமாக செயல்படுத்த முடியும். அப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினால் ஏழைகளிடம் குறிப்பாக தாய்க்குலத்திடம் உங்களுக்கும் அரசுக்கும் மாபெரும் புகழும், மதிப்பும் கிடைக்கும் என்று மேயர் சைதை துரைசாமி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

பெருந்தலைவர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் மக்களின் பசி தீர்த்த அன்னலட்சுமி என்று நீங்களும் புகழப்படுவீர்கள். வரலாற்றில் என்றென்றும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். எப்படியாவது இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு உத்தரவு போடுங்கள் என்றும் கூறினார்.

‘’உண்மையில் இத்தனை குறைந்த செலவுதான் ஆகிறதா..? நம்ப முடியவில்லை. அப்படி என்றால் ஏன் ஹோட்டல்களில் ஒவ்வொரு பொருளுக்கும் நிறைய விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்? நிறைய ஹோட்டல்கள் நஷ்டம் என்று  மூடப்படுகிறதே?’’ என்று கேள்வி எழுப்பினார் ஜெயலலிதா.

அதற்கு சைதை துரைசாமியின் பதில்..?

  • நாளை பார்க்கலாம்.