காலில் தீ பிடிக்குதா..?

Image

மருத்துவ விழிப்புணர்வு

துங்கச்செல்லும் நேரத்தில் பாதங்களில் நெருப்பு பட்டது போன்ற எரிச்சல் முதியவர்களுக்கு வருவதுண்டு. கண் திருஷ்டிக்கு போட்ட எலுமிச்சம் பழம், வெற்றிலை போன்றவைகளை மிதித்ததால் இப்படி எரிவதாகச் சொல்வார்கள். உண்மையில் உடலில் பி வைட்டமின்கள் குறையும் நேரத்தில் இப்படிப்பட்ட எரிச்சல் வரும். அதேபோல் சர்க்கரை நோய், தைராய்டு ஹார்மோன்கள் கட்டுப்பாடு இழப்பதாலும் எரிச்சல் வரலாம்.

குளிர்ந்த தண்ணீரில் கால் நனைப்பது அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுப்பது இதன் தீவிரத்தைக் குறைக்கும். மஞ்சளில் ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. எனவே மஞ்சளை நீர் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, பாதங்களில் தடவினால் விரைவில் நல்ல பயன் கிடைக்கும். மஞ்சள், இஞ்சி போன்றவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பயன் தரும். வைட்டமின் பி சத்து நிறைந்த பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். முறைப்படி பரிசோதனைகள் செய்து, மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

Leave a Comment