• Home
  • சினிமா
  • முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காத காரணம் இது தானா..?

முதல்வன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்காத காரணம் இது தானா..?

Image

சீக்ரெட் உடைத்த அமைச்சர் எ.வ.வேலு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து வெளியான முதல்வன் படம் சூப்பர் ஹிட் அடித்தது எல்லோருக்கும் தெரியும். அந்த படத்தில் நடிப்பதற்கு ஷங்கர் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அணுகினார் என்பதும் அவர் மறுத்ததும் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம். ஆனால், ஏன் அந்த படத்தில் நடக்க மறுத்தார் என்ற காரணத்தை அமைச்சர் எ.வ.வேலு அம்பலப்படுத்தியிருகிறார்.

அமைச்சர் எ.வ.வேலுக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ரொம்பவே ஒற்றுமை உண்டு. ஏனென்றால், இரண்டு பேருமே பஸ் கண்டக்டராக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். அதனாலே எ.வ.வேலு எழுதிய, ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை ரஜினிகாந்த் வெளியிட ஒப்புக்கொண்டார்.

ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்து முன்னேறியதை பல இடங்களில் பேசியிருக்கிறார். ஆனால், எ.வ.வேலு அதை எங்கேயும் பேசுவதில்லை. இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தி இந்து என் ராம் இதை வெளிப்படையாகப் பேசினார்.

இந்து என்.ராம், “அரசியல் வரலாற்றில் கலைஞர் ஏற்படுத்திய சாதனைகளை எதிர்காலத்தில் சமமாக்குவது கடினம். 5 முறை முதல்வர், 50 ஆண்டுகள் தி.மு.க தலைவர், போட்டியிட்ட 13 முறையும் சட்டமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்டவர். அரசியலில் கலைஞர் சாதித்ததை எட்டிப்பிடித்தவர்கள் என இந்திய அரசியலில் யாரும் இருக்க முடியாது. மாநில அரசியலில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால், வேறு தலைவர்கள் பிரதமர் பதவியைப் பிடிக்க முயற்சித்தார்கள்.

மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது அவரின் உறுதியான கொள்கைகள். அனைத்து துறைகளிலும் கோலோச்சினார். பத்திரிகை சுதந்திரத்துக்கு பெரிய காப்பாளராக இருந்தார். இந்த நூல் தாய் எனும் தலைப்பில் வந்தது மிகப் பொருத்தமான தலைப்பு. தாய் மாக்சிம் கார்க்கியின் பிரபலமான நாவல். இந்த நாவல் குறித்து, `நேரத்துக்கு ஏற்ற புத்தகம்’ என்று லெனின் பாராட்டியதை கார்க்கி குறிப்பிட்டிருக்கிறார். இங்கு இருப்பவர்களில் இருவர் கண்டக்டர்களாக இருந்தவர்கள். ஒரு கண்டக்டர் சூப்பர் ஸ்டார், இன்னொரு கண்டக்டர் மாண்புமிகு அமைச்சர் (எ.வ.வேலு)” என்றார்.

இதையடுத்து எ.வ.வேலு பேசுகையில், “கலைஞர் எனும் தாய் என்ற புத்தகத்தை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருந்தது, ஒன்று நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் `மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை நான் படித்தேன், ஓர் இனிமையை பெற்றேன்’ என கலைஞர் எழுதியிருந்தார். அதற்குப் பின் எனக்கும் அதை படிக்கச் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, இதற்கு அதுவும் ஒரு காரணம். 11 ஆண்டுகளாக அரசுப்பணிகள், கழகப் பணிகள் இல்லாதபோது பல்வேறு புத்தகங்களில் குறிப்பெடுத்து ஒரு இலக்கை அமைத்துக்கொண்டு எழுதினேன். தமிழை வளர்த்த பெருமை பக்தி இலக்கியங்களுக்கு உண்டு. பிற்பாதியில் திராவிடம் தமிழை வளர்த்தது. கலையுலகத்தின் காந்தம் சூப்பர் ஸ்டார் ரஜினி. முதல்வன் படத்தில் ரஜினியை நடிக்க ஒரு முயற்சி நடந்தது. அப்போது அவர், `தமிழ்நாட்டை பெரியவர் ஆண்டுகொண்டிருக்கிறபோது அதில் நடிக்க உடன்பாடு இல்லை’ என்று மறுத்துவிட்டார்…” என்று காரணத்தை வெளிப்படையாகக் கூறினார்.

அடேங்கப்பா, ரஜினிக்கு கருணாநிதி மீது இத்தனை மரியாதையா?

Leave a Comment