• Home
  • தமிழ் லீடர்
  • ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய டீலிங் இருக்குதா..?

ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய டீலிங் இருக்குதா..?

Image

அதிர்ச்சி தரும் உண்மைகள்

கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. அமைச்சர்கள் அத்தனை பேரும் சிறையில் தான் இருப்பார்கள். கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்படுவார்’ என்று ஸ்டாலின் ஆவேசம் காட்டினார்.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் எடப்பாடி பழனிசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு காரணம், ஸ்டாலினுடன் ஏற்படுத்திக்கொண்ட ரகசிய உடன்படிக்கை என்று சொல்லப்படுகிறது. இந்த ரகசிய உடன்படிக்கையில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பன்னீர்செல்வம் டீம் சில தகவல்களை கசிய வைத்திருக்கிறது.

நான் முதலமைச்சராக இருந்து வசித்த வீடு, அது எனக்கு ரொம்ப ராசியான வீடு  அந்த வீட்டையே எனக்கு ஒதுக்க வேண்டும்” என்று திமுக ஆட்சி அமைந்ததும்  எடப்பாடி வைத்த முதல் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு மட்டுமின்றி சம்பந்தி மீதான 4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு, 11மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் நடந்த ஊழல் வழக்கு, ஸ்மார்ட் சிட்டி வழக்கு, 2லட்சம் டன் நிலக்கரி காணாமல் போன விவகாரம் உள்ளிட்ட அனைத்து ஊழல் வழக்குகளையும் கிடப்பில்  போட வேண்டும்  என்கிற  எடப்பாடியின் வேண்டுகோளும் அப்படியே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில்  தவறான தகவல் தெரிவித்தாக எடப்பாடி மீது தொடரப்பட் வழக்கில், “அப்படி தகவல்களை மறைப்பது ஒன்றும் பெரிய குற்றமில்லை”  என அரசுத் தரப்பு நீதிமன்றத்திலேயே தெரிவித்து எடப்பாடியை காப்பாற்றியிருக்கிறது.

மூன்று முறை முதல்வராக இருந்த  ஓ.பி.எஸ்  அவர்களை  முதல்வரிசையில்  அமர்த்துவது எனது தனிப்பட்ட உரிமை  என்று  சபாநாயகர் உறுதிகாட்டிய நிலையில்.. முதல்வர் ஸ்டாலினே எழுந்து நின்று எடப்பாடியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்  என கோரிக்கை  வைத்த காரணத்தால் ஓ.பி.எஸ்ஸின் இருக்கை மூன்றாவது வரிசைக்கு மாற்றப்பட்டது..

அடுத்து திமுக வுக்கும் எடப்பாடி திமுக-வுக்கும் துரைமுருகன் மூலமாக புரோக்கராக செயல்பட்டு வருகிற கே.பி.முனுசாமிக்கு பல கோடி ரூபாய் மதிப்புடைய குவாரி உரிமங்கள் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் பெட்ரோல் பங்க் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றுவரை எடப்பாடியின் உறவினர் நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்கள் மற்றும் காண்ட்ராக்ட் வேலைகளை தொடர்ந்து வழங்கி எடப்பாடியின் கஜானா நிரம்பி வழிய உதவுகிறார்கள்.

இப்படி எடப்பாடியை திமுக ஆட்சி பொத்திப் பாதுகாப்பதும்., அவரது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதும் எதற்காக என்று தெரியுமா?

அதிமுகவை தொடர்ந்து பிளந்து வைத்து திவாலாக்கவும், அதன் மூலம் திமுகவை தொடர்ந்து வாழவும் ஆளவும் வைக்கவும்தான் என்று குற்றச்சாட்டு கூறிவருகிறார்கள். இவற்றை ஸ்டாலின் அல்லது எடப்பாடி பழனிசாமி மறுக்க முடியுமா என்பதே கேள்வி.

Leave a Comment