நகத்தில் பச்சை நிறக் கோடு இருக்கிறதா..?

ஹெல்த் பத்திரமா பாத்துக்கோங்க

நகத்தின் நிறம் மாறுவது நோயின் அறிகுறி என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதாவது வெள்ளை நிறத்துக்கு மாறினால் ரத்தசோகை, கல்லீரல் பாதிப்பு என்பார்கள். மஞ்சள் நிறத்துக்கு மாறினால் நீரிழிவு, சுவாசக் கோளாறு என்றும் நீல நிறத்துக்கு மாறினால் ஆக்சிஜன் குறைபாடு, ரத்த ஓட்டத்தில் பிரச்னையாக இருக்கலாம் என்று சொல்வார்கள்.

அதேபோல் நகத்தில் பச்சை நிறம் தென்படுவது பாக்டீரியா தொற்றாகவும் சாம்பல் நிறமாக மாறுவது கிட்னி கோளாறைக் குறிக்கலாம். சின்னச்சின்ன புள்ளிகள் விழுவது கால்சியம் குறைவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதேநேரம், நகத்தில் அழுத்தமான கோடு விழுவது ஆபத்தான அறிகுறியாக கருதப்படுகிறது. அதாவது, நகத்தில் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் அழுத்தமான கோடு விழுந்தால் அது புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே, கருமையான கோடுகளைக் கண்டதும் பரிசோதனை செய்துகொண்டால் ஆபத்தான புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலே தப்பித்துக்கொள்ள முடியும்.

Leave a Comment