ஞானகுரு பதில்கள்
கேள்வி : கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது உண்மையா..?
- என்.செல்வரங்கம். புதுக்கோட்டை
ஞானகுரு
ஆலயத்தின் கோபுரத்தை தூரத்தில் இருந்து பார்ப்பதே மிகப்பெரும் புண்ணியம் தரும் என்பதைச் சொல்வதற்கே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்கிறார்கள். அதேபோல் கோபுர தரிசனம் பாப விமோசனம் என்றும் சொல்வார்கள். இதை அப்படியே நம்பிவிடாதீர்கள். ஆன்மிகரீதியாகவும், அறிவியல்ரீதியாகவும் இதில் எந்த உண்மையும் இல்லை.
சாதி ரீதியாக நசுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது அதேநேரம் அவர்கள் மதத்தில் இருந்து விலகிவிடக் கூடாது என்பதற்காகத் தரப்படும் பொய்யான நம்பிக்கை. யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாதீர்கள். கேள்வி கேளுங்கள். உண்மை புரியும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
