ஞானகுரு பதில்கள்
கேள்வி : நல்ல மேய்ப்பன் என்றால் குடும்பத் தலைவரா அல்லது அரசியல்வாதியா..?
- திவ்யா, ராசிபுரம்
ஞானகுரு ;
புலி, ஓநாய் போன்ற மிருகங்கள் தாக்க வரும்போது, தன் உயிரைக் கொடுத்தாவது ஆட்டுக் கூட்டத்தைக் காப்பாற்றும் மனிதரை நல்ல மேய்ப்பன் என்கிறார்கள். அதேநேரம், ஆடுகளை பாதுகாப்புடன் வளர்த்து, அன்பு காட்டி, நன்கு கொழுக்கவைத்து, கசாப்புக் கடைக்குத்தான் விற்பனை செய்யப்போகிறார் அந்த மேய்ப்பன். மனிதர்களுக்கு மட்டுமே அவர் நல்ல மேய்ப்பன், ஆடுகளுக்கு ஓநாயும் ஒன்றுதான், நல்ல மேய்ப்பனும் ஒன்றுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
