இதற்குத்தான் கும்பாபிஷேகம் நடக்கிறதா?

ஞானகுரு பதில்

கேள்வி : கோயில்களில் கும்பாபிஷேகம் எதற்காக நடத்தப்படுகிறது..?

  • பி.சுசிலா, மாயூரம்.

ஞானகுரு ;

புதிய கோயில் கட்டப்படும் நேரத்திலும், பழைய கோயில் புதுப்பிக்கப்படும் நேரத்திலும் கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். ஹோமங்கள், விசேஷ பூஜைகள், கலச ஸ்தாபனம் செய்து மூர்த்தியை புனித நீரால் அபிஷேகம் செய்கிறார்கள். இந்த சடங்குகளை அனைத்து ஆன்மிகவாதிகளும் கட்டாயம் செய்யவேண்டும் என்றே கருதுகிறார்கள்.

இதன் அர்த்தம் என்னவென்றால், குறிப்பிட்ட காலம் கடந்துவிட்டால் கடவுளுக்கும் கோயிலுக்கும் சக்தி குறைந்துவிடும் என்று நம்புகிறார்கள். கடவுளுக்கு சக்தி குறையுமா..? மந்திரத்தால் கடவுளுக்கு மீண்டும் சக்தி வந்துவிடுமா..? கோயிலுக்கும் கடவுளுக்கும் சக்தி வந்துவிட்டது என்பதை எப்படி உறுதி செய்கிறார்கள் என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. அதனாலே கும்பாபிஷேகம் எல்லா கோயிலிலும் நடந்துகொண்டே இருக்கிறது. இனியாவது கேள்வி கேளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment