ஈஷா மையத்தில் பலர் எரிக்கப்பட்டது அம்பலம்
இன்று ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த அபிபாதா என்பவர் மரணம் அடைந்திருக்கிறார். இவர் தான் ஈஷா யோக மையத்தின் மயானத்தில் இறுதிச் சடங்கு செய்தவர் என்று இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
சமீபத்தில் ஈஷா மையத்தின் மயானம் குறித்து சர்ச்சை உருவானது. அப்போது இதே அர்ஜுன் சம்பத், இன்னமும் அந்த மயானம் செயல்படவே தொடங்கவில்லை என்று தானாகவே முன்வந்து ஒரு கருத்து கூறி ஈஷாவுக்கு ஆதரவு கொடுத்தார். இன்று அவரே, ’’ஈஷா யோகா மையத்தின் பழுத்த பிரம்மச்சாரிகளில் முக்கியமானவரான தெய்வத்திரு சுவாமி அபிபாதா அவர்கள் சத்கதி அடைந்ததை கேட்டறிந்தேன் சுவாமி அவர்கள் ஈஷாவுக்கும் எனக்குமான உறவுக்கு பாலமாக இருந்தார்.
பெரும் அதிகாரத்திற்குரிய காரியங்களையும், சின்னஞ்சிறு அடிப்படை தேவைக்குரிய காரியங்களையும் சுவாமி அவர்கள் ஒரே ஆளாக எவ்வித்தியாசமும் கையாண்டதை பிரமித்து பார்த்திருக்கிறேன். ஈஷாவின் மயானங்களில் பலருக்கு மிகவும் பக்தியோடு இறுதி காரியங்களில் ஈடுபடுவதை கண்டு நெகிழ்வடைந்திருக்கிறேன் அவருடைய குருவின் பாதத்தில் இளைப்பாற ஈசனை பிரார்த்திக்கிறேன்…’’ என்று பதிவு போட்டிருக்கிறார்.
இதற்கு முன் ஈஷாவில் உள்ள தகன மையம் செயல்பட தொடங்கவில்லை என்று கூறிய அர்ஜுன் சம்பத் இப்போது, ஈஷாவின் மயானங்களில் பலருக்கு இறுதி காரியங்கள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார். தகன மேடைக்கு அனுமதி கொடுப்பதற்கு கோவை மாநகராட்சி ஆர்வமாக இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
ஜக்கி வாசுதேவ் பற்றி பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், செந்தில்குமார் போன்றோரின் பதவிகள் பறிக்கப்படுகின்றன. இதை எல்லாம் பார்த்தால் முதல்வர் ஸ்டாலினும் ஜக்கியும் கூட்டாளிதானோ என்ற சந்தேகம் வருவதைத் தடுக்க முடியவில்லை. இதை முதல்வர் ஸ்டாலினே தெளிவு படுத்த வேண்டும்.