விஜய் பக்கா சங்கி என்பது உண்மையா?

Image

தெறிக்கவிடும் உடன்பிறப்புகள்

விஜய் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றதுமே., ஆளும் தி.மு.க.வுக்கு எதிராகத்தான் அவர் களத்தில் இறங்குவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே பாணியில் பாசிசத்தை விட தி.மு.க.வின் குடும்ப அரசியலை கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதோடு நான் திராவிட மாடலை எதிர்ப்பு தெரிவித்ததும், ஏ டீம் பீ டீம்னு கதறுவாங்க… அப்படியே கதறட்டும்’’ என்று பேசியிருந்தார்.

இதற்கு தி.மு.க .அமைச்சர் ரகுபதி, ‘’விஜய் பாஜகவின் ‘ஏ டீமும்’ இல்லை, ‘பி டீமும்’ இல்லை. அவர் பாஜகவின் ‘சி டீம்’. நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாடு ஒரு பிரம்மாண்ட சினிமா மாநாடு. அதிமுக பற்றி பேசினால் எடுபடாது என்பதால் அந்தக்கட்சி பற்றி விஜய் பேசவில்லை. பாஜகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள்.

விக்கிரவாண்டியில் நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே திமுக நிறைய கூட்டம் நடத்தி உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக. திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக திமுக உள்ளது.” என்று நேரடியாகவே தாக்கினார்.

இதையடுத்து தி.மு.க.வினர் அத்தனை பேரும் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். குறிப்பாக பாசிசத்துக்கு எதிரா பேசுறீங்களே, நீங்க என்ன பாயாசமா என்று கேட்டார். அதற்கு பதிலடியாக, ‘’கெளரி லங்கேஸ், கல்புர்கி,தபோல்கர், பன்சாரே, அனிதா, ஆசிபா, பில்கிஸ் பானுவை கொன்றது பாசிசமா ! பாயாசமா ? மாட்டுக்கறியின் பெயரால் மனிதனை கொலை செய்வது பாசிசமா ! பாயாசமா ? என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், மாட்டுக்கறியின் பெயரால் மனிதனை கொலை செய்வது என இந்த நாட்டு மக்களை சூறையாடும் பாசிச ஆர்எஸ்எஸ்-பாஜகவையும் பெயரை சொல்லக்கூட முதுகெலும்பு இல்லையா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

தி.மு.க.வை எதிர்ப்பதற்கு பா.ஜ.க. அனுப்பியிருக்கும் பழைய சங்கி சீமான் என்றால் புதிய சங்கி விஜய். சிறுபான்மையினர் மற்றும் தலித் ஓட்டுகளை சூறையாட வந்திருக்கிறார் என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

Leave a Comment