மிஸ்டர் திருடர்..!
மனைவி : என்னங்க, நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு, ‘உன் மாமனார் பொண்டாட்டிக்குப் போட்ட நகையெல்லாம் வித்துத் தின்னுட்டியே, ஒரு பைசா கூட சேர்த்துவைக்கலை’ன்னு உங்களை திட்டுட்டிப் போறான்… எங்க சொந்தக்காரன் மாதிரி தெரியலையே…
கணவன் : அடியே, அவன் நம்ம வீட்டுல திருட வந்து ஏமாந்து போறான்…
……………………….
திருடன் : ஒழுங்கா பீரோ சாவிய குடுத்துடு.. இல்லேண்ணா உன் பொண்டாட்டியை கொன்னுடுவேன்..
கணவன் : பீரோ சாவியை குடுக்கலாம்னுதான் நினைச்சேன், ஆனா, உன்னோட டீல் எனக்கு பிடிச்சிருக்கு. தர முடியாது, என்ன செய்வியோ செஞ்சுக்கோ.
…………………
போலீஸ் : என்ன சார்.. உங்க வீட்டுல திருடினவன்கிட்டே ஆட்டோ கிராஃப் வாங்கி வச்சிருக்கீங்களா..?
கணவன் : பின்னே என்ன சார், என் பொண்டாட்டிக்கே பயம் காட்டிட்டாரே. அவர் என் தெய்வம் சார்.
……………………………….
வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா என்ன கொடுப்பே..?
திருடன்: அடுத்த திருட்டுல பாதி தர்றேன் சார்.
……………………………
போலீஸ் : என்ன..? உங்க வீட்ல திருடினவன் ரொம்ப அப்பாவியா..?
பெண் : ஆமா சார்.. பீரோவுல இருந்த வெள்ளித் தட்டை பார்த்து, இது என்ன பலான படத்து சி.டி. யான்னு கேட்டான்..
…………………………….
நீதிபதி : ஒரு சைக்கிளை திருடியிருக்கியே… வெட்கமா இல்லே..?
திருடன் : எனக்கும் வெட்கமாத்தான் இருக்குது, இனிமே மோட்டார் சைக்கிளை திருடுறேன் யுவர் ஆனர்.
திருடன் : பேசாம வேறே ஏரியாவிலே போய் திருடலாமான்னு நெனைக்கிறேன் ஏட்டையா..
ஏட்டு : அப்படியெல்லாம் செஞ்சு எங்க பொழைப்புல மண்ணள்ளி போட்டுறாதப்பா.