ஆண் எனும் தெய்வப்பிறவி
ஆண்கள் எல்லாரும் ரொம்ப நல்லவர்கள்ன்னு சொன்னா நம்ப மாட்டீங்க. ஆனா, படிச்சுப் பாருங்க. நிச்சயம் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
- எத்தனை மோசமான பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை நேரில் ஐ லவ் யூ சொன்னால் கோபப்படுவது, செருப்பைக் கழட்டுவது போன்றவைகளை எந்த ஆணும் செய்வதே இல்லை.
- ஆண்கள் சீட்டில் பொண்ணுங்க உட்கார்ந்திருதால் கண்டக்டரிடம் எந்த ஆணும் புகார் சொல்வதில்லை. பரிதாபமாக பார்ப்பதோடு சரி.
- மனைவி எம்புட்டு அடிச்சாலும் ஆண்கள் சத்தம் போட்டு அழுவதே இல்லை.
- சொத்து வாங்கினால் மனைவி, பிள்ளை பெயரில் வாங்குவார்கள். எல்.ஐ.சி. பாலிசி மட்டும் ஆண்கள் பெயரில் இருக்கும்.
- யாராவது ஒரு பெண் லிஃப்ட் கேட்டால் வேறு வழியில் செல்ல வேண்டிய அவசரம் இருந்தாலும் அந்த பெண்ணை பொறுப்பாக கொண்டு போய் விடுவார்கள்.
- எந்த ஒரு அப்பனும் மகனிடம், ‘’மருமகப்பொண்ணு உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா..” என்று சந்தேகம் கேட்பதே இல்லை.
- வெளிநாட்டு மாப்பிள்ளை போன்று வெளிநாட்டு மணப்பெண்ணை எந்த ஆணும் தேடுவதில்லை.
- ஆண்களுக்கு வயிறு பசித்தாலும் சீரியல் பார்க்கும் நேரத்தில் பெண்களை தொந்தரவு செய்வதே இல்லை.
- என் செல்போனுக்கு ரீசார்ஜ் செஞ்சுடு என்று எந்த பெண்ணிடமும் ஆண் சொல்வதே இல்லை.
ஒரு பஸ்… இரண்டு பெண்கள்
ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் “யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா… இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ” என்றாள்.
கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் “யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா… வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா” என்றாள்.
“என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?” என்று கண்டக்டர் கேட்டதும் முதல் பெண் சொன்னாள் “இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செ`த்துப் போவேன்” என்றாள்.
இரண்டாவது பெண், “இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்” என்றதும் கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு, “அங்கே என்ன பிரச்னை” என்று கேட்டான்.
கண்டக்டர் அச்சத்துடன், ‘’அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேங்குது. இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செ`த்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது”. என்று புலம்பினார்.
அதற்கு அந்த மனுசன் “நான் ஒரு யோசனை சொல்லவா? கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செ`த்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செ`த்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்” என்றான்.
“நல்ல ஆளுய்யா நீ… அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்கக்ட்டே நான் என்னய்யா பதில் சொல்றது. என்னை தூக்கி அவன் மிதிக்கிறதுக்கா?” என்று கேட்டார்.
அதற்கு, “அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்..” என்றான். கண்டக்டர்.
இன்னைக்கு நல்ல நாள்
கணவன் காலையில் கண் விழித்ததும் மனைவியிடம், ‘இன்னைக்கு ரொம்பவும் நல்ல நாளும்மா…’ என்றான். அவள் கண்டுகொள்ளாமல் போனாள்.
அடுத்த நாளும் காலையில் கண் விழித்ததும் மனைவியிடம், ‘’இன்னையும் நல்ல நாளுதான்’ என்றான். அவன் சொன்னதை மனைவி வினோதமாகப் பார்த்தாலும் கண்டுகொள்ளவில்லை.
திரும்பத் திரும்ப தினமும் காலையில் இப்படி சொல்லத் தொடங்கினான் கணவன். ஒரு நாள் மனைவிக்கு ரொம்பவே கடுப்பாகிவிட்டது. அவள், ‘’தினமும் இன்னைக்கு நல்ல நாளுன்னு சொன்னா என்ன அர்த்தம்?’ என்று கேட்டான்.
அதைக் கேட்டவன், ‘போன வாரம் நமக்குள்ள சண்டை வந்தப்ப நீ என்ன சொன்னேன்னு நினைச்சுப் பாரு. நான் இதே மாதிரி பேசிக்கிட்டு இருந்தா ஒரு நல்ல நாள் பார்த்து அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுவேன்னு சொன்னே. அதைத்தான் உனக்கு இத்தனை நாளும் மறைமுகமாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்’ என்றபடி சிரித்தான். அப்புறமென்ன, கணவன் பலமான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.