சிகாகோ பிரமாண்டம்
அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினுக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கலைநிகழ்ச்சிகளை முதல்வர் ரசித்துப் பேசினார்.
இந்த கூட்டத்தை அ.தி.மு.க.வினர் போட்டோ ஷாப் என்று விமர்சனம் செய்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் தொழில்புரட்சி அப்டின்னு சொல்றீங்க,அதிகமான தொழில் கொண்டு வந்தோம், வேலைவாய்ப்பை உருவாக்கினோம் அப்டின்னு சொல்றீங்க.. அதனையெல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால் நாங்கள் மட்டுமல்ல பொதுமக்களும் உண்மைநிலையை தெரிந்து கொள்வார்கள் என்பதால் தான் வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை கேட்கிறோம்’’ என்று கேட்டிருக்கிறார்.
ஸ்டாலினுக்கு சிகாகோவில் இத்தனை பிரமாண்ட வரவேற்பும் கூட்டமும் கூடும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை எனவே, இதனை பொறுத்துக்கொள்ள முடியாமலே எடப்பாடி தொடர்ந்து வன்மம் கக்குவதாகக் கூறிவருகிறார்கள்.