• Home
  • அரசியல்
  • பகுத்தறிவுப் பாதையில் விலகுகிறதா தி.மு.க..?

பகுத்தறிவுப் பாதையில் விலகுகிறதா தி.மு.க..?

Image

கொதிக்கும் உடன்பிறப்புகள்

கருணாநிதி காலத்திலும் அறநிலையத்துறை இயங்கிவந்தது. ஆனால், அது கோயில் பாதுகாப்பையும் பக்தர்கள் வசதியையும் மட்டுமே முன்னிறுத்தியது. ஆனால், இப்போது அறநிலையத்துறை மட்டுமின்றி அத்தனை அமைச்சர்களும், தலைவர்களும் பகுத்தறிவுப் பாதையில் இருந்து விலகுகிறார்கள். இது பா.ஜ.க.வைப் பார்ப்பது போலவே இருக்கிறது என்று கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

தி.மு.க. அபிமானிகள், ‘’பராசக்தி என்கிற பெயரில் ரெட்ஜெயிண்ட்t பட உருவாக்கத்தில் ஈடுபடுகிறது. “ஐயா, கலைஞர் எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க படத்தின் பெயரை விட்டுவிடுங்கள்” என்கிறோம். ஆனால், யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 160 அடியில் முருகன் சிலை அமைப்போம் என்கிறார். “ஐயா, முருகன் மாநாடு நடத்திய நீங்கள் முருகன் சிலை வைக்க வேண்டாம் என்று சொன்னால் கேட்கப் போவதில்லை. கலைஞர் நிறுவிய திருவள்ளுவர் சிலையின் 133 அடி உயரத்தைத் தாண்டி எதையும் நிறுவாமல் இருப்பது கலைஞருக்கும் திருவள்ளுவருக்குமான மரியாதையாக இருக்கும். பார்த்துச் செய்யுங்கள் என்கிறோம். யாரும் செவி சாய்க்கவில்லை.

அரசு கட்டடங்களுக்கு ஐயரை அழைத்து வந்து சமசுகிருத மந்திரம் ஓதி பூமிப்பூசை நடத்துகிறார்கள். அதில் அமைச்சரும் மேயரும் கலந்து கொண்டு சடங்கு செய்கிறார்கள். “ஐயா.. கலைஞர் கால திமுக….” என்று கீறல் விழுந்த ஒலித்தட்டு போல பிதற்றிக்கொண்டிருக்கிறோம். வழக்கமாக, தலைவர்கள் தான் தொண்டர்களுக்குக் கொள்கைப் பாடம் நடத்துவார்கள். இங்கு தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். தலைவர்களுக்கு யார் சொல்லித் தருவது என்று தான் தெரியவில்லை…’ என்று வருத்தப்படுகிறார்கள்.

அதேபோல் திருமுருகன் காந்தி இன்று, ‘’விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்காக வாகனத்தில் வந்து இறங்கும் முன்னரே கைது செய்தது காவல்துறை. ஒப்பந்த ஊழியர்கள் ஒன்றுகூடும் முன்னர் கைது செய்தது காவல்துறை. அரிட்டாபட்டி ஊர்வலத்தில் தோழர்களை தேடி இழுத்து சென்றது காவல்துறை. பரந்தூருக்கு போவதற்கு முன்னர் சுங்கச்சாவடியில் கைது செய்தது காவல்துறை. மேல்மா போராட்ட குழுவின் மீதான குண்டர் சட்டத்தை கண்டித்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்திறங்கும் பொழுதே கைது செய்து அப்புறப்படுத்தியது காவல்துறை.

வேங்கைவயல் நீதிக்கான போராட வந்தவர்களை கைது செய்து முடக்கியது காவல்துறை. பெரியாரை இழிவு செய்யும் சீமானை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை. இத்தனை ஒடுக்குமுறையையும் திறம்பட செய்த திமுக அரசின் காவல்துறை திருப்பரங்குன்றத்தை முன்வைத்து கலவரம் செய்ய சங்கிகள் ஒன்று கூடுவதை தடுக்க இயலாமல் நின்றதா? முற்போக்காளர்கள் மீது பாயும் காவல்துறையை பற்றியோ, சங்கிகளோடு கைகுலுக்கும் காவல்துறையை பற்றியோ அக்கறை கொள்ளாத திமுக எவ்வகை ‘திராவிட மாடல்’?’ என்று கேள்வி எழுப்புகிறார்.

சபாஷ், சரியான கேள்வி.

Leave a Comment