ஆச்சர்ய மருத்துவம்
கொத்தமல்லி விதை தண்ணீர் தைராய்டு பிரச்சினைக்கு நல்ல மருந்தாக சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதனாலே நம் வீட்டில் கீச்சன் பொருளில் ஒன்றாக இன்றும் கொத்தமல்லி விதை உள்ளது.
இது உடலின் ஹார்மோன் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தவும், குறிப்பாக மெதுவாக செயல்படும் தைராய்டை (ஹைப்போதைராய்டிசம்) தூண்டவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
மாலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் முழு கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்தால், அந்த விதைகளின் மருத்துவச் சத்துகள் தண்ணீரில் கலக்கத் தொடங்கும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து அரை கிளாஸ் அளவிற்கு குறைத்தால் சத்துதுடன் கூடிய மருத்துவ நீர் கிடைக்கும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக குடித்தால் உடலின் மாற்றுச்சுருக்கம் (metabolism) மேம்பட்டு, தைராய்டு செயல்பாடு சீராகத் தொடங்கும்.
சில வாரங்கள் தொடர்ந்து குடித்தால் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, மனஅழுத்தம், சரும உலர்ச்சி போன்ற தைராய்டு அறிகுறிகளிலும் முன்னேற்றம் உணரலாம்.
ஆனால் தைராய்டு என்பது ஒரு ஹார்மோன் சார்ந்த முக்கிய பிரச்சினை. எனவே ஆங்கில மருந்து எடுத்துக் கொண்டிருப்போர், அதனை நிறுத்திவிடக் கூடாது. அதோடு இதனை எடுத்துக்கொண்டு, பரிசோதனை செய்தபிறகே மருத்துவர் ஆலோசனையுடன் மருந்தை மாற்ற வேண்டும்.












