அழகு என்பது நிஜமா..?

ஞானகுரு பதில்

கேள்வி : மனிதர்கள் எந்த இடத்தில் அதிகம் ஏமாறுகிறார்கள்..?

  • என்.வினோத்குமார், குற்றாலம்.

ஞானகுரு ;

அழகு என்பதை நம்பியே மனிதர்கள் அதிகம் ஏமாறுகிறார்கள். அழகான நடிகர், நடிகைகள் பற்றி என்ன எழுதினாலும் படிக்கிறார்கள், அவர்களை திரையில் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கிறார்கள். அழகான விளம்பரத்தைப் பார்த்தால், அந்த பொருளை வாங்கி விடுகிறார்கள். 18 நாளில் சிவப்பழகு கிரீம் என்று சொன்னதை நம்பி 18 வருடங்களாக வாங்கி ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள்.

அழகான பட்டாம்பூச்சியை யாராவது நசுக்கினால் அவரை கொடூரமானவராகப் பார்க்கிறார்கள். கரப்பான் பூச்சியைக் கொல்பவரை ஹீரோவாகப் பார்க்கிறார்கள்.

அழகான கையெழுத்துக்கு நிறைய மதிப்பெண் போடுகிறார்கள். அழகான நெக்லஸ் வாழ்க்கையை அழகாக்கும் என்ற் பெண் நினைக்கிறார். அழகான கப்பில் காஃபி குடித்தால் அது அதிக சுவை தரும் என்று நினைக்கிறார்கள். அழகுக்கும் உண்மைக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.  

Leave a Comment